தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மே 4 ஆம் தேதியான நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடந்த முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். மற்றொரு பக்கம் அரசியலின் புதிய அலையாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சி அமைப்பார் என்றும் அவருக்கு மக்கள் ஆதரவை இருப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.
சமீபத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் பெரும்பாலானவை திமுக ஆட்சி தான் என்று தெரிவித்துள்ளன. ஒரு சில கருத்துக்கணிப்புகளில் அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆட்சி என்று கூறப்பட்டது. கருத்துக்கணிப்புகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளன.

இந்த நிலையில், கருத்துக்கணிப்புகளுக்கு அப்பால் முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் ஆட்சியை தொடர்வார் என்ற நம்பிக்கையை அமைச்சர் சேகர்பாபு கொடுத்துள்ளார். திருவள்ளூர் பொன்னேரி அருகே அமைந்துள்ள பிரசித்திபெற்ற சிறுவாபுரி முருகன் கோவிலில் குடும்பத்துடன் அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார்.
இதையும் படிங்க: நெனச்ச மாதிரியே நடந்துருச்சு..! வணிக சிலிண்டர் விலை உயர்வு..! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், மீண்டும் ஸ்டாலின் ஆட்சி தொடரும் என்ற நம்பிக்கையை கொடுத்தார். கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் இன்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு தேர்தல் மக்களை வஞ்சிப்பதை அதிக அரசு வாடிக்கையாக கொண்டிருப்பதாகவும் கூறினார். வணிக சிலிண்டர் விலை உயர்வு குறித்து அப்போது சுட்டிக்காட்டி பேசினார்.
இதையும் படிங்க: தேர்தல் முடிவு நெருங்கியாச்சு..! திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கிய சந்திப்பு..!!