மதுரை சோலை அழகு புறம் பகுதியில் நலத்திட்ட துவக்க விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கஜினி முகமது போன்று படையெடுப்பு செய்து இந்த பகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை பெற்றுக் கொடுத்துள்ளேன் என்றும் மிகவும் மோசமான பட்டியலில் மதுரை மாநகராட்சி முதல் இடத்தில் உள்ளது எனவும் கூறினார். அதிமுக ஆட்சி இருக்கும் வரை மாநகராட்சி சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைக்கப்பட்டிருந்தது.
நான்கு மாசி வீதிகளில் உலக தர சாலை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது., பத்து பாலங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டது., 4 வருடங்கள் கடந்து விட்டது வசந்த ராயர் மண்டபம் இன்னும் புனரமைக்கப்படவில்லை என்று கூறினார். எதிர்க்கட்சியின் பணியை முடக்கும் விதமாக ஆளுங்கட்சி தந்திர வேலைகள் செய்து வருகிறது. எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்டா பகுதிகளுக்கு சென்று விவசாயிகளின் குறையை எடுத்துச் சொன்னார் அதை அரசாங்கம் முறையாக கேட்டு நிவாரணம் கொடுத்திருக்க வேண்டும்.

அதிமுகவின் பணியை முடக்குவதற்காக எங்களில் உள்ள சிலரை ஒத்த கருத்தோடு இருக்க முடியாது ஏற்றத்தாழ்வு இருக்கும் அவங்களை வைத்துக்கொண்டு எப்படியாவது அரசு ஆட்சியில் அவலங்களை மூடி மறைக்க வேண்டும் என்பதற்காக செயல்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார் ஒன்றிணைப்பு என்றாலே கட்சியை விட்டு நீக்கும் பணி நடைபெற்று வருகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த செல்லூர் ராஜு, இதுபோன்று விதண்டம் விதமான கேள்விகளை கேட்கக்கூடாது என்றார்.
இதையும் படிங்க: யார் கூட கூட்டணி... எத்தனை சீட்?... எல்லாம் எடப்பாடி கண்ட்ரோல்... நழுவிய செல்லூர் ராஜு
மாபெரும் இயக்கத்தில் அனைவரும் தான் பாடுபட்டார்கள்., ஆரம்பத்தில் செங்கோட்டையன் தான் ஒற்ற தலைமை வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக ஆக்க வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவர் அவர்தான் அவ்வாறு இருக்கும் போது இப்பொழுது என்ன வந்தது. நமக்கு திமுக தான் எதிரி என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூட்டணிக்கு தவம் இருக்கோமா? அந்த அவசியம் அதிமுகவுக்கு இல்ல... ராஜேந்திர பாலாஜி காட்டம்...!