வரும் ஏழாம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாக்குத்திருட்டை தடுப்போம், வாக்கு அதிகாரத்தைப் பெற்றுக் கொடுப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது. பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் இந்த மாநாட்டின் இடத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை நேரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநாட்டுக்கு கால்கோள் நாட்டு விழாவில் பங்கேற்றுள்ளதாகவும், இந்த மாநாடு ஒரு திருப்புமுனையான மாநாடாக அமையும் என்றும் மாநாட்டில் ஒரு லட்சம் தொண்டர்கள் திரள்வார்கள் என்றும் தெரிவித்தார். டெல்லியில் இருந்து மேலிட தலைவர்கள் இந்த மாநாட்டில் பலர் பங்கேற்க இருப்பதாகவும், தமிழகத்திலிருந்தும் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்ற இருப்பதாகவும் கூறினார்.

வெங்கட்ராமன் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டதற்கு விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதிமுக ஆட்சியிலும் பொறுப்பு டிஜிபிகளும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இது ஒன்றும் புதிதல்ல எனவும் உத்தர பிரதேசத்தில் இதுவரை ஐந்து முறை பொறுப்பு டிஜிபிக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: மக்கள் உரிமை யாத்திரை... தொண்டர்கள் சூழ ராகுல், தேஜஸ்வி யாதவ் பைக் பயணம்
தமிழக முதலமைச்சரிடம் வெளிநாட்டு பயணம் குறித்த வெள்ளை அறிக்கை கேட்கிறார்களே., பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும்போது கூட வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை விடட்டும் எனக் கூறினார். இந்தியா கூட்டணி வலிமையாக, இணக்கமாக உள்ளது என்றும் ஐந்து தேர்தல்களில் வெற்றி கண்டு கூட்டணி எனவும் கூறினார். தமிழகத்திற்கு கல்வி நிதியை மத்திய அரசு வழங்க கோரி சசிகாந்த் செந்தில் எம் பி உண்ணாவிரதம் மேற்கொண்ட நிலையில் அவர் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனநாயகத்தை பாதுகாக்க நடத்தும் அவரது போராட்டம் வரவேற்றுத்தக்கது ஆனால் அவரது உடல் நலம் முக்கியம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: துணை ஜனாதிபதி தேர்தல்... இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்பு மனு தாக்கல்..!