வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

#BREAKING: ஆமாம்… இதற்கு தான் அமித் ஷாவை சந்தித்தேன்! செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

டெல்லிக்கு சென்றபோது உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக செங்கோட்டையன் தெரிவித்தார்.

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அதிமுக ஆட்சி அமைக்கும் எனவும் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதற்கான முயற்சிகளை 10 நாட்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்தில் பங்கேற்க மாட்டேன் எனவும் தெரிவித்தார். தலைமைக்கு செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் அவரைக் கட்சிப் பதவியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.

அவரது ஆதரவாளர்கள் கட்சிப் பதவியையும் பறித்தார். இதைத்தொடர்ந்து ஏராளமான அதிமுகவினர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக தங்களது பதவியை ராஜினாமா செய்ய கடிதம் கொடுத்தனர். அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்று செங்கோட்டை கூற, ஓ பன்னீர்செல்வம் இதற்கு முழு ஆதரவை தெரிவித்தார். ஓபிஎஸ் ஆதரவாளர்களும் செங்கோட்டையனை சந்தித்து முழு ஆதரவை கொடுத்தனர். 

அதிமுகவில் பல குழப்பங்கள் நீடிக்கும் நிலையில் செங்கோட்டையன் ஹரிதுவாருக்கு பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில், டெல்லியில் இருந்து திரும்பியதும் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து அரசியல் சூழல் குறித்து விவாதித்ததாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: கடைசி அழைப்பு… எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்க ஆரம்பித்த செங்கோட்டையன் ஆதரவாளர்கள்… அதிமுகவில் பூகம்பம்…!

மேலும், ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியதாக தெரிவித்தார். அதிமுக வலிமை பெற உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததாகவும் தெரிவித்தார். அனைவரின் ஒத்துழைப்போடு மக்கள் பணிக்காக தொடர்ந்த போராடுவேன் என செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர்கள் திடீர் பல்டி… முக்கிய புள்ளியைச் சந்திக்க சாரை சாரையாய் வாகனங்களில் பயணம்…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी