கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டூர், எஸ்.பி. நகரில் தவெக வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது பேசிய செங்கோட்டையன், விமர்சனத்தை பற்றி நான் கவலைப்படவில்லை - காய்கின்ற மரத்திற்கு தான் கல்லடி படும் என்று கூறினார். தமிழகத்தை ஆளுவதற்கு தமிழ்நாட்டில் ஒருவர் பிறந்துள்ளார் என்றால் அவர்தான் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய். விஜய் ஆட்சி மலர்ந்த உடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த வாய்ப்புகள் எனக்கு அமையும் என்றார்.
தவெக வுக்கும் -திமுகவுக்கும் தான் போட்டியே தவிர வேற ஒருவருக்கும் இல்லை என கூறினார். தனியார் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் தமிழக வெற்றி கழகத்திற்கு 55% பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கிடைத்துள்ளன. திமுக 17 சதவீதம் கூட்டணி 14 சதவிகிதம், நாம் தமிழர் கட்சி 4 சதவிகிதம் பேர் ஆதரவளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் விஜய்தான் முதல்வராக அமருவார் என்றும் கூறினார். நேற்று முன்தினம் கூட இங்கு சில உரையாடல்கள் நிகழ்ந்துள்ளது. யார் எதைச் சொன்னாலும் மக்கள்தான் எனக்கு முக்கியமே தவிர மக்கள் நெஞ்சங்கள் நிறைந்து வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். மக்கள் நேசிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமே தவிர மற்றவர் விமர்சனம் செய்வதை பற்றி நான் கவலைப் படவில்லை என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவை எதிர்க்கும் துணிச்சல் மிக்க ஒரே தலைவர் ஸ்டாலின்தான்..! அமைச்சர் ரகுபதி பரப்புரை.!!
அனைவரும் சொன்னார்கள் விமர்சனம் கடுமையாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்கள், என்னைப் பொறுத்த வரையில் விமர்சனமும் மற்றவர்களை பற்றி கருத்துக்கள் சொல்வது சால பொருத்தமாக இருக்காது என்றார். மூன்று முறை வாக்கு கேட்காமலே ஒன்பது முறை வெற்றி பெற்றுள்ளேன் என்றால் மக்கள் என்னை நம்புகிறார்கள். என் உயிர் மூச்சு உள்ளவரை இந்த இயக்கத்தில் இருந்து பாடுபடுவேன் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பூதாகரமாக வெடிக்கும் ரூ.10 ஆயிரம் பரிசு கூப்பன்..! களேபரமான ஜெயக்குமார் தொகுதி..!!