தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைவில் முடிக்க முடியவில்லை எனும் குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே தொடர்ந்து வருகிறது. இந்தப் பிரச்னை சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடமிருந்தும், நீதிமன்றங்களிலும், ஊடகங்களிலும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு உரிய நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதம், அவர்களின் மன உளைச்சலை அதிகரிப்பதோடு, சமூக நம்பிக்கையையும் பாதிக்கிறது. தமிழகத்தில் பாதுகாப்பு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. பிறந்த குழந்தை முதல் மூதாட்டி வரை வயது வித்தியாசம் பாராமல் நிகழும் பாலியல் குற்றங்கள் பதற வைக்கிறது.

இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் கூட நிகழும் பாலியல் வன்கொடுமை குற்றங்கள், படிக்கும் இடத்தில் நிகழும் பாலியல் குற்றங்கள், ஆசிரியர்களே பிள்ளைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லைகள், போதையில் முதியவர் என்று கூட பாராமல் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம் அப்படியான பல குற்றங்கள் நிகழ்வது பல்வேறு கேள்விகளை நமக்கு முன் வைக்கிறது.
இதையும் படிங்க: பழனி கோயிலில் களமிறங்கியது புதிய குழு... தேவஸ்தான அதிகாரிகளுடன் நேரில் ஆலோசனை... வெளியே எடுக்கப்பட்ட முக்கிய ஆவணங்கள்...!
சென்னையில் சிறுமியிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக பிரபல தொழில் அதிபரும் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளருமான வீரமணி கைது செய்யப்பட்டார். சிறுமி ஒருவரிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதுடன் செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்ததாக தொழில் அதிபர் வீரமணி மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் சம்பவத்தில் தொழில் அதிபர் வீரமணிக்கு உதவியதாக சாந்தி எனும் பெண்ணும் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண்ணை கொலை செய்து பிரியாணி அண்டாவில் வேகவைத்த கொடூரம்... முக்கிய குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்..!!