சங்கர் ஜிவால் 1993-ஆம் ஆண்டு மன்னார்குடியில் உதவி காவல் கண்காணிப்பாளராக தனது பணியைத் தொடங்கினார். பின்னர், 1995-இல் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து, மாநில காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். 2000 முதல் 2006 வரை மத்திய அரசின் மயக்கு மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தில் தென் மண்டல இயக்குநராகப் பணியாற்றியது.
அவரது பணி வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியாகும். மேலும், உளவுத்துறை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவில் துணை ஆய்வாளர் மற்றும் ஆய்வாளராகவும் பணியாற்றினார். 2019-இல், அவரது சிறப்பான சேவைக்காக குடியரசுத் தலைவர் காவல் பதக்கம் வழங்கப்பட்டது.2021-ஆம் ஆண்டு திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன், சங்கர் ஜிவால் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். 26 மாதங்கள் இப்பதவியில் பணியாற்றிய பின்னர், 2023-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி, மாநில காவல்துறையின் தலைமை இயக்குநராக பொறுப்பேற்றார்.

முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்பரிந்துரைத்த மூன்று அதிகாரிகளின் பட்டியலில் இருந்து இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டது.
இதையும் படிங்க: டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அடித்த ஜாக்பாட்.. ஓய்வுக்குப் பிறகு இந்த துறையின் தலைவராகிறாரா? - டிக் அடித்த முதல்வர்..!
சங்கர் ஜிவால் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அவருக்கு ஒரு புதிய பொறுப்பை வழங்க முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சங்கர் ஜிவாலை புதிதாக உருவாக்கப்படவுள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளார். இது அவரது நீண்டகால அனுபவத்தை பயன்படுத்தி, மாநிலத்தின் அவசரகால பதிலளிப்பு அமைப்பை மேம்படுத்துவதற்கு ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: நல்லகண்ணு உடல்நிலை எப்படி இருக்கு? மருத்துவமனைக்கு ஓடோடி சென்று விசாரித்த முதல்வர்!