இந்திய அரசியல் களத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. இது தேர்தல் செயல்முறையின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கு அவசியமானது. இருப்பினும், சமீபத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் மற்றும் இறந்தவர்கள் அல்லது இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை அகற்றுதல் போன்றவற்றை உள்ளடக்கியவை திருத்த பணிகளாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த செயல்முறை மூலம், தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடைபெறுவது உறுதி செய்யப்படுகிறது. ஆனால், சில சமயங்களில் இந்தப் பணிகள் அரசியல் கட்சிகளிடையே சர்ச்சைகளை உருவாக்குவதுண்டு.

தேர்தல் ஆணையம் மத்திய பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் முறைகேடுகள் நடைபெறும் இடமும் கூறி எதிர்க்கட்சிகள் சிறப்பு வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து வருகின்றன. பீகாரில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் திருத்தத்தில் 65 லட்சத்திற்கும் மேலான மக்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த சிறப்பு வாக்காளர் திருத்தத்தை தமிழக அரசும் எதிர்த்து வருகிறது. ஆனால் நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் திருத்தம் நடத்தப்படும் என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இதையும் படிங்க: ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..!! ED அதிகாரிகளுக்கு பறந்த நோட்டீஸ்..!!
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த மாதம் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் SIR பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: சத்தியமங்கலம்: சட்டவிரோத ரிசார்ட்களை மூட வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!