சிவகங்கை நகர பாஜக வர்த்தக பிரிவு தலைவர் சதீஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை காவலர் குடியிருப்பு எதிரே வாகன பழுது நீக்கும் கடை நடத்தி வந்தவர் சதீஷ், இவர் சிவகங்கை நகர் பாரதிய ஜனதா கட்சியினுடைய நகர் வர்த்தக பிரிவு தலைவராக இருந்து வருகின்றார். நேற்று இரவு இவர் தனது இருசக்கர வாகன் பழுது நீக்கும் கடையின் அருகே இருக்கக்கூடிய அறையில் தங்கியுள்ளார். அப்போது இவருக்கும் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதில் சிலர் தள்ளிவிட்டதில் சதீஷ் படுகாயம் அடைந்து கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து நண்பர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த சண்டை தொடர்பாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அப்போது சதீஷ் படுகாயத்துடன் கிடந்ததையடுத்து அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை அளித்தும் சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: சாப்பாட்டுல புழுவும், பல்லியும் இருக்குது..! இது கண்ணுக்கு தெரியலையா? நயினார் கேள்வி..!
இது சம்பந்தமாக சிவகங்கை நகர் காவல்துறையினர் ஐந்துக்கு மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக நகர் வர்த்தக பிரிவினுடைய தலைவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் சிவகங்கை நகரம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “இந்தி தெரியாது போடா” பனியனை பீகாருக்கும் எடுத்துக்கிட்டு போங்க ஸ்டாலின்.. திமுகவை விளாசிய தமிழிசை..!