சிவகாசி ஒன்றியம் சித்துராஜபுரம் கிராமத்தின் கிழக்கு த் தெருவைச் சேர்ந்தபால்ராஜ் என்பவரது மகன் மாரிச்செல்வம் (வயது 18). கூலி வேலைக்குச் சென்று வரும் இளைஞர் மாரிச்செல்வத்தை வீட்டிலிருந்து அழைத்துச் சென்ற ஒரு கும்பல் ஓட ஓட விரட்டிச் சென்று கொங்கலாபுரம் ஜக்கம்மாள் காலனி குடியிருப்புப் பகுதிகளுக்குள் வைத்து அரிவாள் போன்ற ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்து விட்டுத்தப்பியோடியது.
இதில் சம்பவ இடத்திலேயே மாரிச்செல்வம் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார்கள் கொலை செய்யப்பட்ட மாரிச்செல்வத்தின் உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு க்காக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைக்க முயன்றனர். ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன்பக்க பின்பக்க கண்ணாடியை உடைத்ததோடு, தடுத்து நிறுத்திய மாரிச் செல்வத்தின் உறவினர்களும், நண்பர்களும் கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி சிவகாசி- வெம்பக்கோட்டை பிரதான சாலை சித்துராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையிலமர்ந்து ஆம்புலன்ஸ் வாகனத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து நடைபெற்று வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பெரும்பாலான வாகனங்கள் வேறு மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா போராட்டம் செய்தவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி கொலையாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்ததை யடுத்து அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை விடுவித்ததுடன், அனைத்து வாகனங்களையும் சென்று வரவழி வகை செய்தனர். இதற்கிடையே மர்ம கும்பல் ஒன்று சாத்தூரிலிருந்து வெம்பக்கோட்டை மார்க்கமாக சிவகாசிக்கு வந்த அரசு பேருந்தின் முன் பக்கக் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது.
இதையும் படிங்க: மரண தண்டனை..! சிறுமிகளை வன்கொடுமை செய்த காமக்கொடூரன்.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
இளைஞர் கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சிவகாசி நகர்க் காவல் நிலைய போலீசார் இளைஞர்களிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மாரிச்செல்வம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது காதல் விவகாரமா? என்பது போன்ற அடிப்படையில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரும் நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 6-க்கும் மேற்பட்டவர்கள் சித்துராஜபுரம் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்து அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்டவரும், கொலை செய்தவர்களும் வெவ்வேறு சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலும், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவியுள்ளதாலும் போலீசார்கள் குவிக்கப்பட்டு ஆங்காங்கே பாதுகாப்பு ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஊட்டி போறீங்களா? இதை தெரிஞ்சுகாமா போகாதீங்க.. உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய அப்டேட்...!