சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. நேற்று சம்பவ இடத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் ராம்பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சட்டவிரோதமாக தகர செட் குடோன் அமைத்து அரசின் எந்தவித அனுமதியும் இல்லாமல் சட்ட விரோத பட்டாசு தயாரிப்பு நடைபெற்று வந்துள்ளது. வழக்கம்போல் நேற்று காலையில் அதிக சப்தம் எழுப்பும் காகித வெடிகளை 5 பேர் தயாரித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தில் தகர செட் உரிமையாளரான செங்கமலப்பட்டியை சேர்ந்த ராம்பிரகாஷ் 32, நாரானாபுரத்தை சேர்ந்த பாண்டிதுறை 35, மீனம்பட்டியை சேர்ந்த இன்னாசிமுத்து 42, அவரது சகோதரர் ஐயப்பராஜா 38 ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 90% தீக்காயமடைந்த குடோன் உரிமையாளர் ராம் பிரகாஷின் அண்ணன் ராமச்சந்திரன் 40, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்தது. உயிரிழந்த 5 பேரில் இருவேறு சகோதரர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிவகாசியில் மீண்டும் சோகம்! சட்டவிரோத பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து! 2 தொழிலாளர்கள் உடல்கருகி பலி!