பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா மீது சமீபத்தில் ஏற்பட்ட சர்ச்சை தமிழ் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டிமன்ற பேச்சாளர் ராஜா அமெரிக்க தமிழ் சங்கத்தின் அழைப்பின் பேரில் அட்லாண்டாவிற்கு அங்கு சென்றிருந்தார். அவருடன் பாரதி பாஸ்கர் போன்ற மற்றொரு பேச்சாளரும் இணைந்திருந்தார்.
அந்த நிகழ்ச்சியின் போது அட்லாண்டா தமிழ் சங்கத்தின் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் தமிழ் உணவுகளை சமைத்து உபசரிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தனர். அவர்கள் மிகுந்த அக்கறையுடன், விருந்தோம்பலுடன் உணவு தயாரித்து பரிமாறியிருக்கிறார்கள். அந்தப் பெண்களில் ஒருவரின் சகோதரர் சமூக வலைதளத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில், ராஜா அந்தப் பெண்களை சந்தித்தபோது அவர்களின் ஊரை முதலில் விசாரித்துவிட்டு, ஊர் பெயர் காரைக்குடி என்று சொன்னதும் "நீங்க என்ன ஆளுங்க?" என்று கேட்டதாகவும், அதன் மூலம் அவர்களின் சாதியை அறிய முயன்றதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்தப் பதிவு வைரலாகி, பலரிடையே கோபத்தையும் விமர்சனத்தையும் தூண்டியது. சிலர் ராஜாவின் செயலை சாதி பாகுபாடாகக் கருதி கடுமையாகக் கண்டித்தனர். அந்த சம்பவத்திற்கு பட்டிமன்ற பேச்சாளர் ராஜா விளக்கம் அளித்தார். சாதி குறித்து கேட்கும் அளவுக்கு சின்ன புத்தி கொண்டவன் அல்ல என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாதி பத்தி கேட்டேனா? அவ்ளோ சின்ன புத்தி இல்ல... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பட்டிமன்றம் ராஜா..!
இந்த நிலையில், பட்டிமன்றம் ராஜாவுக்கு ஆதரவாக சாலமன் பாப்பையா குரல் கொடுத்துள்ளார். யாரோ ஒரு தாய் அறிந்தோ அறியாமலோ ராஜாவை பற்றி ஒரு தவறான கணிப்பில் இச்செய்தியை வெளியிட்டிருக்கிறார். ராஜா என்னுடைய பண்ணையிலே 45 ஆண்டுகளுக்கு மேலே இருக்கிறார், அவர் எப்படிப்பட்டவர் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். என்னுடைய பிள்ளை அது என்று தெரிவித்தார்.
நான் அங்கு இல்லாதபோது எதையும் உறுதிப்படுத்த முடியாது. ஆனால் அவருடைய மனசுக்குள்ளே சாதிய உணர்வோ அதைப் பற்றிய சிந்தனையோ கொஞ்சமும் இல்லை என்பதை நான் ஆயிரம் முறை சத்தியம் செய்து சொல்லுவேன் என்றும் அவரைப் பற்றி இப்படிச் சொன்னது மிகப்பெரிய வருத்தம்' எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முடிவுக்கு வரும் 50 ஆண்டு பாரம்பரிய சவுத் பிளாக்..!! குட்பை சொல்லும் பிரதமர் மோடி..!! நாளை முதல் புதிய அலுவலகத்தில்..!!