காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் குடும்பத்தினர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதனால் இரு நாடுகளிடையே தீவிர போர் மூளுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 10ம் தேதி மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
இதையும் படிங்க: விட்ரா வண்டிய Earth-க்கு!! டிராகன் விண்கலத்தில் பூமியை நோக்கி புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா!
இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த சம்மதம் தெரிவித்ததாக கூறினார். அவரது அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் இருதரப்பு சண்டை நிறுத்தத்தை இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியும் உறுதி செய்தார். அன்று மாலை 5 மணியில் இருந்து தாக்குதல் நிறுத்தம் அமலானது..
இதனிடையே ட்ரம்ப் மத்தியஸ்சம் குறித்தும், போர் நிறுத்தம் குறித்து இந்தியா - பாக்., அறிவிக்கும் முன்னரே ட்ரம்ப் அறிவித்தது குறித்தும் சர்ச்சையானது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் கூட்டி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.
ஆனால், பாகிஸ்தான் கெஞ்சியதால் மட்டுமே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. சிறப்பு பார்லிமெண்ட் கூட்டத்தை கூட்டவே இல்லை.

இந்த நிலையில் பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21-ந்தேதி துவங்கி ஆகஸ்ட் 21-ந் தேதி வரை ஒரு மாதம் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
கூட்டத்தொடர் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் 19ம் தேதி நடக்கிறது. ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு கூடும் முதல் பார்லி,. கூட்டம் என்பதால் இதில் அதுகுறித்த நடவடிக்கை பற்றியும், போர் நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலையீடு பற்றியும் விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த கூட்டத்தொடருக்கான காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா தலைமையில் நாளை நடைபெற உள்ளது. சோனியா இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்ளும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை, பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதை தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, இந்த கூட்டத்தில் ஆலோசனை நடைபெறும் என தெரிகிறது.
இதையும் படிங்க: பிரச்னையை பேசி தீர்த்துக்கலாம் வாங்க!! சீனாவுக்கு ஜெய்சங்கர் அழைப்பு!! நீடிக்குமா சமரசம்!!