திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புனிதமான சிவாலயம். இது சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாகப் போற்றப்படுகிறது. இங்கு சிவபெருமான் அண்ணாமலையார் என்ற திருப்பெயருடன் வணங்கப்படுகிறார். அம்மன் உண்ணாமுலையம்மன் என்று அழைக்கப்படுகிறார்.
இந்தக் கோவில் தமிழகத்தின் மிகப் பழமையான மற்றும் பிரமாண்டமான சிவன் கோவில்களில் ஒன்றாகும். இதன் பின்னணியில் உள்ள அண்ணாமலை மலையே சிவபெருமானின் சொரூபமாகக் கருதப்படுகிறது. இங்கு வரும் பக்தர்கள் மலையின் அருளால் தங்களின் உள்ளார்ந்த ஒளியை உணர்கின்றனர். நெருப்பின் தீயால் அக்னி தலமாக இருந்தாலும், இங்கு பக்தியின் ஒளி எல்லா இருளையும் விரட்டுகிறது என நம்புகின்றனர்.

உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு கடந்த சில மாதங்களாகவே அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரைப்பட நடிகர்,நடிகைகள், இயக்குனர்கள் தொழிலதிபர்கள் என பலர் வருகை தந்து அண்ணாமலையாரை தரிசித்து 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பாமக-வோட இந்த நிலைமைக்கு அன்புமணிதான் காரணம்! கொந்தளித்த ராமதாஸ்! 18 பக்க பதில் மனு தாக்கல்!
அந்த வகையில் இன்று பாமக வேட்பாளர் பட்டியலுடன் சவுமியா அன்புமணி திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தார். நேற்றைய தினம் என் டி ஏ கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் எந்தெந்த தொகுதிகள் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அன்புமணி நேர்காணல் செய்து தேர்ந்தெடுத்த உள்ள நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அன்புமணியின் மனைவி சௌமியா வேட்பாளர் பட்டியலுடன் சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை?... செய்தியாளர்களிடம் டென்ஷன் ஆன அன்புமணி... அப்படி என்ன கேட்டாங்க...?!