தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பு பேருந்துகளை இயக்குவது வழக்கமான ஒரு ஏற்பாடாகும். இந்த ஆண்டு 2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை விரிவான திட்டங்களை வகுத்துள்ளது.
பொங்கல் அன்று சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து மாவட்டங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போதைய தகவல்களின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு ஜனவரி 10 முதல் 13 வரையிலான நாட்களில் சுமார் 5,736 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இதனுடன், மாநிலம் முழுவதும் தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளும் சேர்த்து மொத்தம் ஏறத்தாழ 22,000 பேருந்துகள் இயக்கப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
இதையும் படிங்க: போராட்டம் தொடரும்... பேச்சுவார்த்தைக்கு பின் இடைநிலை ஆசிரியர்கள் திட்டவட்டம்...!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து இந்த சிறப்பு சேவைகள் தொடங்கும் என்றும் இதற்காக இன்று உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு இறுதி ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. தேவை அதிகரித்தால் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்தும் கூடுதல் சேவைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. TNSTC மற்றும் SETC பேருந்துகளுக்கு ஆன்லைனில் 90 நாட்கள் முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் 10 இடங்களிலும், கோயம்பேட்டில் 1 இடத்திலும் பொங்கல் சிறப்பு பேருந்து பயணத்திற்காக 11 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.TNSTC official app மற்றும் www.tnstc.in போன்ற Whatsapp Number 9444018898 மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பழைய ஓய்வூதியம் vs புதிய ஓய்வூதியம்... ஜாக்டோ ஜியோ அமைப்புடன் தமிழக அரசு பேச்சு வார்த்தை...!