எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலைக்கு இடையே நாங்கள் ஏமாளிகள் அல்ல என்பது குறித்த கேள்விக்கு அவங்களுக்குள்ள அதுக்குள்ள என்ன பங்கு பிரிப்பதில் என்ன பிரச்சனை என தெரியவில்லை தற்போது இந்த நாடகத்தை தொடங்கி இருக்கிறார்கள் உச்சக்கட்டத்தை தொடும் போது என்னவென்று தெரியும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்
அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலய வளாகத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை வரும் 23ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி விழாவிற்கான பந்தல் அமைக்கும் பணி உணவருந்துமிடம் விழாவிற்கான பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது விழாவிற்கு வரக்கூடிய பொது மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உள்ளிட்ட பல்துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவ சங்கர் 23ஆம் தேதி நடைபெறும் விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். காலை ஒன்பதரை மணி முதல் மாலை வரை பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என கூறினார்.
இதையும் படிங்க: முடிச்சு விட்டாய்ங்க.. அதிமுகவை சீரழிக்கவே பாஜகவோடு கூட்டணி..! Ex எம்.பி அன்வர் ராஜா குற்றச்சாட்டு..!
மேலும் 27ஆம் தேதி பிரதமர் வருகை குறித்த கேள்விக்கு அது குறித்த தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்துள்ளது, மற்றபடி அரசு ரீதியான தகவல் ஏதும் வரவில்லை எனக் கூறினார். மேலும் நாங்கள் ஏமாளிகள் அல்ல. அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியது குறித்தும் நாங்களும் ஏமாளிகள் அல்ல என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து கேட்ட கேள்விக்கு அவங்களுக்குள்ள அதுக்குள்ள என்ன பங்கு பிரிப்பதில் என்ன பிரச்சனை என தெரியவில்லை. தற்போது இந்த நாடகத்தை தொடங்கி இருக்கிறார்கள். உச்சக்கட்டத்தை தொடும் போது என்னவென்று தெரியும் என கூறினார்.
இதையும் படிங்க: ஸ்டாலினே மீண்டும் ஆட்சி அமைப்பார்..! Ex எம்.பி அன்வர் ராஜா உறுதி..!