சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின்பு காரைக்குடியில் இருந்த 36 வார்டுகளை உள்ளடக்கி அதனுடன் ரெண்டு பேரூராட்சிகள் நான்கு ஊராட்சிகள் இணைக்கப்பட்டு மிகப்பெரிய மாநகராட்சியாக உருவெடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித் திரிகிறது.
இருசக்கர வாகனங்களில் செல்வோர் இந்த நாய்கள் குறுக்கே வந்து கீழே விழுந்து விபத்துகளும் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் குழந்தைகள்,பெண்கள், மற்றும் முதியவர்கள் பலரை இந்த தெரு நாய்கள் கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அதன் ஊழியர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் இணைந்து தற்போது அந்த தெரு நாய் வலை வைத்து பிடித்து அந்த இடத்திலேயே இனப்பெருக்க கட்டுப்பாடு ஊசி (குடும்பக் கட்டுப்பாடு) ஊசி போட்டு வருகிறார்கள்.
இதையும் படிங்க: #BREAKING: விஜய் மாநாட்டின் 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து… அப்பளம் போல் நொறுங்கிய கார்!
இந்த ஊசி போடுவதால் தெரு நாய்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்று தெரிய வருகிறது. மாநகராட்சி மற்றும் கால்நடை துறையின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வேற லெவல் ட்விஸ்ட்! அரசியலில் களமிறங்கும் சூர்யா... என்ன சொல்லி இருக்காங்கன்னு தெரியுமா?