• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, November 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தை அழிக்க மேகதாது அணை திட்டம்: மத்திய அரசு உடனே தடுக்க பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்!

    தமிழகத்தை அழிக்கும் நோக்கில் மேகதாதுவில் அணை கட்டத் துடிக்கும் கர்நாடகத்தின் முயற்சியை மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டுத் தடுத்து நிறுத்த வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 02 Nov 2026 18:35:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Stop Karnataka's Mekedatu Dam Bid: Farmers Association Leader PR Pandian Urges Centre

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணையைக் கட்டி, தமிழகத்திற்குரிய மாதாந்திர நதிநீர் பங்கீட்டைத் தடுத்து நிறுத்தி, செழிப்பான காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கித் தமிழகத்தை அழிக்கும் நோக்கில் கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டுத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மிகக் காட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

    காவிரி நதிநீர்ப் பகிர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு மாதாந்தோறும் திறந்துவிட வேண்டிய உரிய நதிநீர்ப் பங்கீட்டை வழங்காமல் கர்நாடக அரசு தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது.

    இந்நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் சுமார் ₹9,000 கோடி மதிப்பீட்டில் 67 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட பிரம்மாண்ட புதிய அணையைக் கட்டுவதற்கான முயற்சிகளில் கர்நாடக அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருவது தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: தொடர் தோல்விகளுக்குப் பின் களமிறங்கும் தேசிய தலைமை: நிதின் நபின் தமிழக வருகை!

    இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: "உச்ச நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்புகளையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளையும் முற்றிலும் புறந்தள்ளிவிட்டு, மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதம் காட்டி வருகிறது.

    தமிழ்நாடு

    கீழ்மடை பாசன மாநிலமான தமிழ்நாட்டின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் இல்லாமல் காவிரியிலோ அல்லது அதன் துணை நதிகளிலோ எந்தவொரு புதிய அணைக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்பது சட்ட விதியாகும். அதை அப்பட்டமாக மீறி, மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு இயல்பாக வர வேண்டிய நதிநீரும், உபரி நீரும் முழுமையாகத் தடுக்கப்பட்டுவிடும்.

    இதன் மூலம் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட ஒட்டுமொத்தக் காவிரி டெல்டா மாவட்டங்களும் விவசாயம் செய்ய முடியாமல் வறண்டு பாலைவனமாக மாறும் பெரும் அபாயம் உருவாகும்.

    தமிழகத்தின் கோடிக்கணக்கான விவசாயிகளையும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் ஒட்டுமொத்தமாக அழிக்கத் துடிக்கும் கர்நாடக அரசின் இந்தச் சட்டவிரோத எதேச்சதிகார நடவடிக்கைக்கு மத்திய அரசு எக்காரணம் கொண்டும் இடமளிக்கக் கூடாது.

    கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கைக்கோ (DPR) அல்லது சுற்றுச்சூழல் அனுமதிகளுக்கோ மத்திய அரசு எந்தவொரு அனுமதியும் வழங்காமல் திட்டவட்டமாக நிராகரிக்க வேண்டும்.

    இவ்விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட்டு, கர்நாடகத்தின் அணை கட்டும் முயற்சியை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்; அதேபோல் தமிழக அரசும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாய அமைப்புகளை ஒருங்கிணைத்துச் சட்டரீதியான அழுத்தங்களை மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் தொடர்ச்சியாகக் கொடுத்துத் தமிழகத்தின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும்" என்று பி.ஆர்.பாண்டியன் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

    காவிரி பாசனப் பகுதிகளில் குருவை மற்றும் சம்பா சாகுபடிக்கான நீர் தேவை இன்றியமையாததாக உள்ள இச்சூழலில், பி.ஆர்.பாண்டியனின் இந்தத் தீர்க்கமான குரல் தமிழக விவசாயப் பெருங்குடி மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: தமிழக ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து சரிவு: தவெக அரசின் நிதி மேலாண்மையைச் சாடும் அண்ணாமலை!

    மேலும் படிங்க
    மறைமுக கருத்துக்கேட்பு கூட்டமா? மீனவ கிராமங்களின் வாழ்வுரிமையை அழிக்காதீர்! சீமான் ஆவேசம்!

    மறைமுக கருத்துக்கேட்பு கூட்டமா? மீனவ கிராமங்களின் வாழ்வுரிமையை அழிக்காதீர்! சீமான் ஆவேசம்!

    தமிழ்நாடு
    மாணவர்களுக்கு நாளை பாராட்டு விழா: முதல்வர் விஜய் நேரில் பங்கேற்று சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்குகிறார்!

    மாணவர்களுக்கு நாளை பாராட்டு விழா: முதல்வர் விஜய் நேரில் பங்கேற்று சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்குகிறார்!

    தமிழ்நாடு
    6 காட்சிகள் அனுமதி: முதல்வர் விஜய்க்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி!

    6 காட்சிகள் அனுமதி: முதல்வர் விஜய்க்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி!

    தமிழ்நாடு
    குழந்தைகள் தின விழா: 61.84 லட்சம் மாணவர்களுக்கு கேக், வாழ்த்து அட்டை - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!

    குழந்தைகள் தின விழா: 61.84 லட்சம் மாணவர்களுக்கு கேக், வாழ்த்து அட்டை - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!

    தமிழ்நாடு
    தைரியமிருந்தால் வழக்கு தொடருங்கள்: பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சவால்!

    தைரியமிருந்தால் வழக்கு தொடருங்கள்: பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சவால்!

    இந்தியா
    இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு: காஞ்சிபுரம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

    இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு: காஞ்சிபுரம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share