திருப்பத்தூர் மாவட்டத்தில், லண்டன் மிஷன் ரோடு பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று வந்த, 11-ஆம் வகுப்பு மாணவன் முகிலன், அதே பள்ளியில் இயங்கும் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.
கொத்தூர் பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி என்பவரின் மகனான முகிலனின் மர்மமான மரணம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு, பள்ளி நிர்வாகம் முகிலனின் தந்தையை தொடர்பு கொண்டு, அவன் பள்ளிக்கு வரவில்லை என தகவல் தெரிவித்தது. இந்த தகவல் மாணவனின் குடும்பத்தினருக்கு கவலையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: தடையை மீறிய சீமான்... வனப்பகுதிக்குள் நுழைந்த நாம் தமிழர் கட்சியினர்! திக்குமுக்காடிய வனத்துறை
இந்நிலையில், இன்று காலை, முகிலன் பயின்று வந்த பள்ளி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு வளையமிட்ட கிணற்றில் அவன் சடலமாக மிதப்பதைக் கண்டு, பள்ளி நிர்வாகம் உடனடியாக அவனது பெற்றோருக்கு தகவல் அளித்தது.

இதையடுத்து, பெற்றோரும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து, முகிலனின் உடலை மீட்டனர்.முகிலனின் மரணம் மர்மமான முறையில் நிகழ்ந்திருப்பதாக அவனது பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். காவல்துறையினர், முகிலனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து.
இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், முகிலன் மரணத்திற்கு நீதி கேட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையும் படிங்க: உடலை வாங்கிக்கிறோம்! ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் பெற்றோர் சம்மதம்...