நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேனி வனப்பகுதியில் இன்று ஆடு, மாடு மேய்க்கும் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, மதுரை மாவட்டம் விராதனூரில் ஜூலை 10 அன்று நடைபெற்ற "மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை" என்ற தலைப்பிலான ஆடு-மாடுகள் மாநாட்டில் வெளியிடப்பட்டது.
இந்த மாநாட்டில், வன உரிமை அங்கீகாரச் சட்டம் 2006-ன் கீழ் மேய்ச்சல் உரிமைகளை வழங்க வேண்டும், தமிழ்நாடு முழுவதும் மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுக்க வேண்டும், மேய்ச்சல் பொருளாதார மேம்பாட்டு வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தப் போராட்டம், மேய்ச்சல் நிலங்கள் மீதான உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும், கால்நடைகளை வளர்க்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: ஸ்டேஷனில் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம்.. தலைமறைவான இளைஞர்.. பாதியில் நிற்கும் விசாரணை..!

இந்த மாநாட்டில், மேய்ச்சல் நிலங்களை மீட்கவும், கால்நடை வளர்ப்போரின் உரிமைகளைப் பாதுகாக்கவும், வன உரிமை அங்கீகாரச் சட்டம் 2006-ன் கீழ் மேய்ச்சல் உரிமைகளை உறுதி செய்யவும், மேய்ச்சல் பொருளாதார மேம்பாட்டு வாரியம் அமைக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில் இன்று சீமான் மாடு மேய்க்கும் போராட்டத்தை முன்னெடுத்தார். தேனியில் நடைபெற்ற இந்த மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இருப்பினும் தடையை மீறி வனத்துறையினர் பேச்சு வார்த்தையை ஏற்க மறுத்து சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் வனப்பகுதிக்குள் நுழைந்தனர்.
வனத்துறையினர் அமைத்த பேரிகார்டுகளை தள்ளிவிட்டு சென்றனர். ஓட்டமும் நடையுமாக வனப்பகுதிக்குள் தடையை மீறி சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் நுழைந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: தமிழகத்தில் நடப்பது இனப்படுகொலை! இலங்கையை ஒப்பிட்டு சீமான் பகிரங்க குற்றச்சாட்டு...