அடையார் நதியை சீரமைக்க அனகாபுத்தூர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. கழிவு நீர் கலப்பதை தடுக்க ஆற்றின் கரையோரம் வசிப்போர் மறுகுடி அமர்வு செய்வது அவசியம் என்றும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆற்றங்கரை வசித்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் மறு குடியமர்வு செய்யப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய உதவிகளுடன் மறு குடியமர்வு செய்யும் அரசின் செயலுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அனகாபுத்தூரில் நீர்நிலைகளில் வசித்த 593 குடும்பங்களுக்கு 390 சதுர அடியில் வீடுகள் கட்டி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பணக்காரர்களின் மதில் சுவரை இடிக்க திமுகவிற்கு துணிவிருக்கா? விளாசிய சீமான்..!

தைலாவரம், கீரப்பாக்கம், பெரும்பாக்கம், நாவலூர் ஆகிய இடங்களில் வீடுகள் கட்டித் தரப்பட உள்ளது எனவும் ஒவ்வொரு குடும்பமும் வேறு இடத்திற்கு குடியமர இடம் மாற்றுப்படியாக ஐந்தாயிரம் ரூபாயும் வாழ்வாதார உதவியாக மாதம் தோறும் 2500 ரூபாயும் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐயா எங்க வீடெல்லாம் போய்டுச்சு..! சீமானிடம் அழுது புலம்பிய அனகாபுத்தூர் மக்கள்..!