சென்னை: வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று (டிசம்பர் 8) மற்றும் நாளை (டிசம்பர் 9) தமிழகத்தின் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் லேசான மழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 8:30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், புதுக்கோட்டை மாவட்டம் மிமிசல் பகுதியில் 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ., மழை பெய்துள்ளது. கிழக்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக இந்த மழை தொடர்கிறது.
வடகடலோர மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 9) மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்திலும், சில சமயம் மணிக்கு 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை!! டிச., 12 வரை மழை தொடரும்!! வானிலை அப்டேட்!

வானிலை மையம் கூறுகையில், “கடந்த சில நாட்களாகவே தென் மாவட்டங்களில் மிதமான மழை தொடர்கிறது. இன்றும் நாளையும் இந்த நிலை நீடிக்கும். சென்னையில் லேசான மழை மட்டுமே” என்று தெரிவித்துள்ளது.
மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கும் வாய்ப்பு உள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை!! டிச., 12 வரை மழை தொடரும்!! வானிலை அப்டேட்!