தமிழகத்தில் 'டிட்வா' புயல் மற்றும் அதைத் தொடர்ந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாகக் கடந்த மாதம் வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கடுமையான மழை பதிவான நிலையில், தற்போது கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, புதுக்கோட்டையில் 4 சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. கிழக்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, டிசம்பர் 7, 2025 முதல் டிசம்பர் 9, 2025 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பதிவாகும் இந்த நிலை டிசம்பர் 13, 2025 வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொருத்தவரையில், வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 4-வது நாளாக இண்டிகோ விமான சேவைகள் பாதிப்பு: பயணிகள் உடைமைகளை கேட்டு வாக்குவாதம்!

அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் (குறிப்பாக மயிலாடுதுறை, தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், நெல்லை, கோவை, நீலகிரி) ஒரு சில இடங்களில் லேசான மழை பதிவாகக்கூடும். வட கடலோர மாவட்டங்கள்: காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். ஒரு சில இடங்களில் மட்டும் லேசான சாரல் மழை இருக்கக்கூடும்.
"அடுத்து இரண்டு வாரங்களுக்குச் சென்னையில் மழை இருக்காது," என்றும், வரக்கூடிய டிசம்பர் 9 அல்லது 10ஆம் தேதி கிழக்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாகச் செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிதமான மழை இருக்கக்கூடும் என்றும் அவர் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கனமழை விடுமுறையை ஈடு செய்ய நடவடிக்கை: நாளை (டிச. 6) சென்னை பள்ளிகள் செயல்படும்!