எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதிகாரிகளை இணைய அரசாங்கம் நடத்த அனுமதித்தால் பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்தது என்பது உணர்வுபூர்வமான விஷயம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கலைஞர் கருணாநிதி இதை ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு செய்ய பிறப்பித்த உத்தரவு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யும்படி தமிழக அரசு மேல்முறையீடு என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு எப்படி இருக்கும் தெரியுமா! திராவிட மாடல் அரசின் தரமான சம்பவம். SEP குறித்து முதல்வர் பெருமிதம்

எழுத்தாளர்களுக்கு வீடு தருவது உணர்வுபூர்வமான விஷயம் இது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தெரியாது என்றும் கூறியுள்ளது. எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீட்டை ரத்து செய்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு இணைய அரசாங்கத்தை நடத்தி வருவதாகவும், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இணைய அரசாங்கம் நடத்தினால் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் நீதிபதி கூறி இருந்தார்.
இந்த நிலையில், தமிழக அரசை நடத்துவது முத்துவின் கருணாநிதி ஸ்டாலின் தான் என்றும் அதிகாரிகள் அல்ல எனவும் உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது. அதிகாரிகள் இணை அரசாங்கம் நடத்துவதாக நீதிபதி கருத்து தெரிவித்த நிலையில் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் கூறியுள்ளார்.
இதனைக் கேட்டதும் அரசு தரப்பு விளக்கம் தொடர்பாக எந்த கருத்தும் கூறப்போவது இல்லை என நீதிபதி தெரிவித்தார்.
இதையும் படிங்க: கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்படியா ஓடும்? சமூகநீதி விடுதிகளை விமர்சித்த நயினார்