தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ எதிர்த்து, மாநிலத்தின் கலாச்சார, வரலாற்று மற்றும் சமூகத் தேவைகளுக்கு ஏற்ப ஒரு தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்க முடிவு செய்தது.
இதற்காக, 2021-ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு, தமிழ்நாட்டிற்கு பிரத்யேகமான கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்தது.
இந்த குழுவின் பரிந்துரைகளை ஏற்று உருவாக்கப்பட்ட மாநில கல்வித் தகுதி என்று முதலமைச்சர் ஸ்டாலினால் வெளியிடப்பட்டது. மாநிலத்தின் கல்விக் கொள்கை தொடர்பாக முதலமைச்ச ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாநில கல்விக் கொள்கை சொல்வது என்ன? முக்கிய அம்சங்களின் முழு விவரம்...

எளிய பின்னணியில் இருந்து, இன்று நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் செல்வது தான் உண்மையான பெருமை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். உங்களை உயர்த்தியதில் நமது திராவிட மாடல் அரசுக்குப் பெருமை என்றும் தெரிவித்தார்.
வரும் ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை பல்லாயிரமெனப் பல்கிப் பெருக, நமது பள்ளிக்கல்வித்துறை வடிவமைத்துள்ள மாநிலப் பள்ளிக் கொள்கை2025-ஐ வெளியிட்டு உள்ளதாக கூறினார்.
மாவட்டம்தோறும் Model Schools, ஒன்றியங்கள் தோறும் மாதிரி வெற்றிப் பள்ளிகள், ஏழை எளிய மாணவர்களுக்கு Residential Schools, அனைத்துப் பள்ளிகளிலும் Smart வகுப்பறைகள் என்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்துவதாக கூறினார். இப்படிதான் இப்படித்தான் தமிழ்நாடு இருக்கும் என்றும் அதை நோக்கியே இந்த அரசு உழைக்கும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அனைவருக்குமான கல்வி தான் மாநில கல்விக் கொள்கை.. அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தெளிவான விளக்கம்..!