பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு ஈகோ பிரச்னை இருக்கிறது என தெரிவித்தார்.
100 நாள் வேலைத் திட்டத்தின் பெயர் மாற்றம் உள்ளிட்டவைகளை திமுக எதிர்த்து வருகிறது. 100 நாள் வேலை திட்டம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினும் தனது கருத்தை கூறி வருகிறார். இந்த நிலையில் காந்தியடிகளை என்று திமுக கொண்டாடியது என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு பெயர் சூட்டி இராக திருச்சி சிவா பேசுவதாகவும் சிறிது காலத்துக்கு முன்பு வரை அறிவாலயத்தில் தேசியக் கொடியை ஏற்றதவர்கள் அவர்கள் என்று குற்றம் சாட்டினார். தனித் தமிழ்நாடு வேண்டும் என்று கேட்டவர்கள் எப்படி தேசியத்தைப் பற்றி பேச முடியும் என்று கேள்வி எழுப்பினார். காந்தியை இதுவரை அவர்கள் கொண்டாடியதே கிடையாது என்றும் சாமானிய மக்களை ஏமாற்றம் செயல் இது என்றும் தெரிவித்தார். காந்தியடிகள் ஊழல் அற்றவர் என்றும் ஆனால் மகாத்மா காந்தி வேலை திட்டத்தில் அதிக ஊழல் நடந்த மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்று என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2026 ஜல்லிக்கட்டு... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு... தமிழக அரசு முக்கிய அறிவிப்பு...!
களத்தில் இல்லாதவர்களோடு போட்டி கிடையாது என்று விஜய் கூறியிருந்த நிலையில், விஜய்தான் களத்தில் இல்லை, பாஜக களமாடிக் கொண்டுதான் இருக்கிறது என்றும் தெரிவித்தார். அவர் பாஜகவை குறிப்பிட்டு பேசவில்லை என்றும் திட்டவட்டமாக கூறினார். திமுகவுக்கும் அதிமுக, பாஜக கூட்டணிக்கும் தான் இடையே தான் போட்டி என்றும் தெரிவித்தார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு ஈகோ பிரச்னை இருக்கிறது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பள்ளி கட்டடம் இடிந்து மாணவர் பலி! இது விபத்து அல்ல! திமுகவின் அலட்சியத்தால் ஏற்பட்ட கொலை: அண்ணாமலை!