2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக தீவிரமாக பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. பாஜக, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. ஏப்ரல் 11 அன்று சென்னையில் நடந்த கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிபழனிசாமி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டனர்.

பாஜக மாநிலம் முழுவதும் பூத் அளவிலான கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இதற்காக எஸ்ஆர்எம் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான பயிலரங்கம் நடத்தப்பட்டது. ஒரே நாடு, ஒரே தேர்தல் கருத்தரங்கம் போன்ற நிகழ்வுகள் மூலம் பாஜக தனது கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல முயல்கிறது, ஆனால் இதற்கு தொண்டர்கள் பங்கேற்பு குறைவாக இருப்பதாகவும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: வெற்று விளம்பர திமுக.. நிர்வாக திறமையே இல்ல... லெஃப்ட் ரைட் வாங்கிய நயினார்..!

தமிழக பாஜக, 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அதிமுகவுடன் கூட்டணி, புதிய தலைமை நியமனம், பூத் அளவிலான வலிமைப்படுத்தல் மற்றும் மற்ற கட்சிகளின் தொண்டர்களை இணைத்தல் போன்ற உத்திகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் தவெக போன்ற கட்சிகளின் வளர்ச்சி, பாஜகவுக்கு சவாலாக உள்ளதாக கருதப்படுகிறது.

திருநெல்வேலி தொகுதியின் மூன்று முறை எம்எல்ஏவான நயினார், தென் தமிழகத்தில் பாஜகவின் அடித்தளத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், நெல்லையில் ஆகஸ்ட் 17 ம் தேதி தமிழக பாஜக முதல் மாநாடு நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.மேலும், சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் அடுத்தடுத்து மாநாடுகள் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தினம் தினம் பாலியல் வன்கொடுமை... இதுதான் ஆன்மீக அரசியலா? நயினார் சரமாரி கேள்வி!