தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கையை முன்வைத்து போராடி வருகின்றனர். இந்தப் பிரச்னை கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ஒரு ஊதிய முரண்பாட்டால் உருவானது. 14 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது போராடும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஊதியப் பிடித்த தொடர்பாக அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் என இரண்டு ஆசிரியர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்றும் திமுக தனது 2016 தேர்தல் அறிக்கையிலும், 2021 தேர்தல் அறிக்கையிலும் ஆசிரியர்களின் ஊதியச் சீரமைப்பு மற்றும் சம ஊதியம் குறித்து வாக்குறுதி அளித்திருந்தது., ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும், முதலமைச்சர் ஸ்டாலின் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டி உள்ளார்.

மாணவர்கள், தங்கள் பெற்றோர்களின் உழைப்பிலும், ஆசிரியப் பெருமக்கள் அக்கறையிலும் சாதனை செய்யும்போது, வெட்கமே இல்லாமல் திமுக ஸ்டிக்கர் ஒட்டிப் பெருமை பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களின் வாழ்க்கை, பல ஆண்டுகளாகக் கேள்விக்குறியாய் இருப்பதை, தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: உரிமைக்காக தெருவில் இறங்கிப் போராடுறாங்க... ஊதியத்தை பிடுங்குறிங்க...! நயினார் கண்டனம்..!
நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் ஆசிரியப் பெருமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு ஊதியம் வழங்க மாட்டோம் என்று அச்சுறுத்துவது திட்டமிட்ட அடக்குமுறை என்று கூறினார். ஆசிரியர்களை அடக்கி, அவர்களின் உரிமைகளை நசுக்கும் திமுக அரசின் செயல்பாடுகள், தமிழகக் கல்வி வரலாற்றில் ஒரு கருப்புப் புள்ளி என்றும் ஆசிரியர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவது, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையே படுகுழியில் தள்ளுவதற்குச் சமம் எனவும் கூறிய அண்ணாமலை, ஆசிரியர்களுக்கு மரியாதையும் பாதுகாப்பும் வழங்கும்போது மட்டுமே, சமூகம் முன்னேறும் என்று கூறினார்.
இதையும் படிங்க: உரிமை கிடைக்க உயிரைக் கொடுப்போம்... 14வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்... பதற்றம்..!