தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் 16 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் ஒரு நீதிக்கான போராட்டம். குறிப்பாக, 2025 டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய தொடர் போராட்டம் சென்னையில் தீவிரமடைந்து, 2026 ஜனவரி தொடக்கத்திலும் நீண்டு வருகிறது.
இந்தப் பிரச்சினையின் அடிப்படை 2009ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் தொடர்புடையது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் எண்.311-இல் தெளிவாக வாக்குறுதி அளித்தது. வாக்குறுதி படி, சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.

இடைநிலை ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது. நல்ல முடிவு எட்டப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்து இருந்த நிலையில் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடருவோம் என்று திட்டவட்டமாக இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: சம வேலைக்கு சம ஊதியம்..! போராடிய இடைநிலை ஆசிரியர்கள் மீது பாய்ந்த வழக்கு..! போலீஸ் அதிரடி..!
தினம்தோறும் போராட்டம் போது போலீஸாரால் கைது செய்யப்பட்டாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 30 ஆவது நாளாக தங்களது போராட்டத்தை இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து வருகின்றனர். இன்று சென்னை பிராட்வே பகுதியில் குவிந்த இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஊதிய உயர்வு வேண்டாம்... பணி நிரந்தரம்தான் வேண்டும்..! பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் போராட்டம்..!