ராமதாஸ், பாமகவின் நிறுவனராகவும், அன்புமணி, கட்சியின் செயல் தலைவராகவும் உள்ளனர். இருவருக்கும் இடையே கட்சியின் முழு கட்டுப்பாடு மற்றும் தலைமைப் பதவி தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உள்ளன. ராமதாஸ், தனது மகன் அன்புமணியை மத்திய அமைச்சராக ஆக்கியது தவறு என்று கூறியுள்ளார், மேலும் அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை என்று விமர்சித்துள்ளார். ராமதாஸ் தொடர்பாக அன்பு மன்றம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.

அவர் கூறியதால் தான் பாஜக ஒரு கூட்டணி வைத்ததாக கூறி இருந்தார். அது மட்டுமல்ல அது அன்புமணி ஆதரவாளர்களை ராமதாசும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணியும் கட்சியிலிருந்து, கட்சி பொறுப்பிலிருந்து நீக்கி வருகின்றனர். இந்த நிலையில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அவரது மகள் ஸ்ரீகாந்தி கலந்து கொண்டார். முகுந்தனின் தாயார் ஆன ஸ்ரீகாந்தி செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தது அன்புமணிக்கு எதிராக அவரை களம் இறக்கி உள்ளதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: எனக்கே முழு உரிமை.. கூட்டணி தான் முடிவு! அன்புமணி ஆதரவாளர்களை சுளுக்கெடுத்த ராமதாஸ்!

இந்த நிலையில், பாமக நிறுவன ராமதாஸ் வசிக்கும் தைலாபுரம் இல்லம் முன்பு பாமகவினர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமதாஸ் மற்றும் அன்புமணியும் விரைவில் ஒன்று சேர வேண்டும் எனக் கூறி தீக்குளிக்க முயன்றதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

உடலில் பெட்ரோலை ஊற்றி கொண்டு முழக்கங்களை எழுப்பியவாறு தீ வைத்துக் கொள்ள முயன்றதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான பிரச்சனையில் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் இருவரும் ஒன்று சேர வேண்டும் எனக் கூறி தீ குளிக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதையும் படிங்க: ராமதாசுக்கே முழு அதிகாரம்! அன்புமணி இப்படியே பேசுனா.. செயற்குழு கூட்டத்தில் கண்டன தீர்மானம்..!