தூத்துக்குடி மாவட்டம் மருதூர் அணைக்கட்டிற்கு தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு சுமார் 20000 கன அடி வெள்ள உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது.
தற்போது, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் செய்தி குறிப்பின்படி, தொடர் கனமழை காரணமாக காரையார் மற்றும் சேர்வலாறு அணைகளில் இருந்து வினாடிக்கு சுமார் 12000 கன அடியும் மணிமுத்தாறு அணையில் இருந்து சுமார் 4000 கனஅடியும் வெள்ள உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது திறந்து விடப்பட்டுள்ள வெள்ள உபரி நீர் தூத்துக்குடி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள மருதூர் அணைக்கட்டிற்கு காலை 6:00 மணி முதல் 7:00 மணிக்குள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அலர்ட் மக்களே...!! 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பகீர் சம்பவம்... தாமிரபரணி கரையோர மக்களுக்கு பறந்தது எச்சரிக்கை...!
இதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தற்போது திறந்து விடப்பட்ட வெள்ள உபரிநீரையும் சேர்த்து மருதூர் அணைக்கட்டிற்கு சுமார் 33000 -ல் இருந்து 35000 கன அடி வரை வெள்ள உபரி நீர் காலை 6 மணி முதல் 7 மணி வரை வந்து சேரும்.
எனவே, மருதூர்மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள்,
கோரம் பள்ளம் ஆறு மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும், மாவட்டத்தின் மழை நீர் தேங்க கூடிய இதர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்கும் படியும் எச்சரிக்கப்படுகிறார்கள்.
மேலும், மருதூர் அணைக்கட்டு, திருவைகுண்டம் அணைக்கட்டு, கோரம்பள்ளம் அணைக்கட்டு, உப்பாறு ஓடை, உப்பாத்து ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளையும் உன்னிப்பாக கண்காணித்து உரிய நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலர்கள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆத்தாடி...!! பாய்ந்து வருது 3,000 கன அடி... சென்னைக்கு ஆபத்தா?