மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் சார்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வின் போது பக்தர்கள் தோல் பையில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் நிகழ்ச்சியின் போது அதிக விசைத்திறன் கொண்ட குழாய்கள் மூலம் அடிக்கக்கூடாது எனவும் வேதிப்பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் அடங்கிய தண்ணீரை பயன்படுத்தக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

உலக புகழ் பெற்ற அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா வரும் எட்டாம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.இதன் சிகர நிகழ்ச்சியான சித்ரா பௌர்ணமி அன்று 12ஆம் தேதி அதிகாலை ஐந்து நாற்பத்தி ஐந்து மணி முதல் ஆறு ஐந்து மணிக்குள் சுந்தரராஜ பெருமாள் கள்ளர் வேடம்பூண்டு தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்.. மே 12ம் தேதி உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு..!

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொள்வர். இந்த நிகழ்ச்சியின் போது வைகையாறு மற்றும் ராமராயர் மண்டகப்படி ஆகிய இடங்களில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தோல் பையில் தண்ணீரை நிரப்பி அழகரை குளிர்விக்கும் விதமாக தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்ச்சியின் போது அதிக விசைத்திறன் கொண்ட குழாய்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்க கூடாது எனவும் வாசனை திரவியங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் அடங்கிய தண்ணீரை பயன்படுத்தக் கூடாது எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது. விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் ஐதீக முறைப்படி தோல் பையில் தண்ணீரை நிரப்பி நேர்த்திக் கடனை செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: யூடியூப்பில் கோடிகளை அள்ளிய இந்தியர்கள்; கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இவ்வளவு வருமானமாம்!