இந்துமக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சோலைகண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் நடைபெற்ற சைவ சமய மாநாட்டிற்க்கு செல்லும் போது உளுந்தூர் பேட்டை அருகே வாகன விபத்து ஏற்பட்டதற்க்கு காரணம் நம்பர் பிளைட் இல்லாத குல்லா போட்ட தாடி வைத்தவர்கள் என்றும், என்னை (ஆதினத்தை) கொல்ல சதி என்றும் மதுரை ஆதினம் பேட்டி அளித்திருந்தார்.
ஆனால் காவல்துறை வெளியிட்ட வீடியோவில் மதுரை ஆதினம் வந்த வாகனமும், ஆதின வாகனத்தின் மீது மோதிய வாகனமும் இரு வழி பாதையில் வரும் போது நான்கு வழி சாலை பிரிவு சந்திப்பில் ஆதினம் கார் பின்னால் வந்த வாகனம் லேசாக உரசி உள்ளது என்று அந்த விடியோவை உற்று ஆய்வு செய்யும் பொழுது உண்மை நிலை நன்றாக தெரிய வருகிறது.

மதுரை ஆதினமடத்தின் புனிதத்தை கெடுக்கும் விதமாகவும், மத பிரச்சனையை உண்டாக்கும் விதமாகவும் மதுரை ஆதினமாக இருந்து கொண்டு வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு பொய்யான விஷப் பேச்சை பரப்பி மக்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கிய 293வது மதுரை ஆதினமாக இருக்கும் ஞானசம்பந்த தேசிய பரமாச்சியாருக்கு இந்து மக்கள்கட்சி வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.
இதையும் படிங்க: கொலை முயற்சியா? விபத்தா? யார் சொல்வது பொய்..? போலீஸ் அறிக்கையை மறுக்கும் மதுரை ஆதினம்..!
வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார் அளிக்கவில்லை ? ஆதினத்தின் பேச்சில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. மதுரை ஆதினத்தின் கொலை முயற்சி குற்றச்சாட்டு கூறிய ஆதினத்தின் மீது பல்வேறு சந்தேகங்களும் மர்மங்களும் எழுகிறது.
மதுரை ஆதினம் அவர்கள் ஒரு மதத்தின் மீது பழி போட்டு ஒரு தவறான பொய்யான குற்றச்சாட்டால் மதுரை ஆதினமடத்திற்கு மட்டுமல்ல திருஞானசம்பந்தர் பக்தர்களாகிய எங்களுக்கும் அவமானமாக உள்ளது. இது போன்று பொய்யான கொலை முயற்சி குற்றச்சாட்டை ஒரு மதத்தின் மீது சம்பந்தமில்லாமல் சுமத்தி குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்துவது மதுரை ஆதினமாக இருக்கும் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல காவல்துறை பாதுகாப்பிற்காகவோ அல்லது விளம்பர நோக்கத்திற்காகவோ மதுரை ஆதினத்தை பின்னால் இருந்து தவறாக யாரெனும் இயக்குவது போல் தெரிகிறது.மதுரை ஆதினத்திற்க்கு பின்னால் ஒரு சதிகார கூட்டமே இருக்கிறது.

1500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான சுவாமி திருஞானசம்பந்தரால் உருவாக்கப்பட்ட மதுரை ஆதினமடத்தின் 293வது மடாதிபதியாக இருக்கும் ஒருவர் கூறும் குற்றச்சாட்டை சாதாரணமான விசமயாக எடுத்து கொள்ளாமல் வாகன விபத்து சம்பந்தமாக மதுரை ஆதினம் அவர்களையும், அவருடன் உடன் வந்தவர்களையும்,, வாகனத்தை உரசிய நபர்களையும் அழைத்து உரிய முறையில் விசாரித்து உண்மை நிலையை மக்கள் மத்தியில் தமிழக காவல்துறையும், தமிழக அரசும் தெளிவுபடுத்த வேண்டும்.
சமீபகாலமாக மதுரை ஆதினமடத்தை களங்கப்படுத்தும் விதமாகவும்,மடத்தின் புனிதத்தை அவமானப்படுத்தும் விதமாகவும் அவரது நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் பார்க்கும் பொழுது மதுரை ஆதினம் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிய வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி மனநலம் பாதிக்கப்பட்டவரோ, குற்றச்சாட்டுக்கு உள்ளானவரோ மதுரை ஆதினமாக இருக்க தகுதியற்றவர்.

எனவே மதுரை ஆதினமடத்திற்க்கு இந்து சமய வளர்ச்சிக்காகவும், இந்து சமயத்தை பாதுகாக்கவும், இந்து சமய ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்வதற்காகவும் மன்னர்கள், ஜமீன்தார்கள்,செல்வந்தர்கள் என தானமாக கொடுத்த சுமார் 1000 கோடிக்கு மேல் இருக்கும் மதுரை ஆதினமடத்தின் சொத்துக்களையும், ஆதினமடத்தின் புகழையும் புனிதத்தையும் பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு
மதுரை ஆதின மரபுகளை மீறி தான்தோன்றி தனமாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் மதுரை ஆதினமாக செயல்படும் 293வது திருஞானசம்பந்த தேசிய பரமாச்சாரியராக மதுரை ஆதினமடத்தில் மடாதிபதியாக வகிக்க தகுதியற்றவர்.அவரை உடனடியாக மதுரை ஆதினம் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டுமென என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரீலு அந்துபோச்சு..! கொலை முயற்சி அல்ல விபத்து தான்..! ஓவர் ஸ்பீடு டிரைவர் மீது வழக்கு..!