ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி மேடையிலேயே திமுக எம்பி மற்றும் எம்எல்ஏ-வுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பெரும் சலசலப்பு உருவானது.
இன்று தமிழகம் முழுவதும் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா மாவட்டம் தோறும் ஒவ்வொரு இடத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் தொடங்கி வைத்த நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டி தனியார் பள்ளியில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. முகாமில் வரவேற்பு பேனரில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் படம் மட்டுமே இருந்ததை பார்த்து கோவத்தோடு மேடைக்கு வந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத் தமிழ்ச்செல்வன் புரோட்டோக்கால் படி தேனி நாடாளுமன்ற உறுப்பினரின் படம் வரவேற்பு பேனரில் ஏன் இல்லை என மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பியதோடு, மேடையில் அமர்ந்திருந்த சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனை திட்டினார்.
தொடர்ந்து கோபத்தில் அமைந்திருந்த ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது நான்தான் வழங்குவேன் என நலத்திட்ட உதவி வழங்கும் அட்டையை நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத் தமிழ்ச் செல்வனின் கையில் இருந்து வெடுக்கென புடுங்கினார்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் ஆணவக்கொலை வழக்கு.. சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸ் முடிவு..!!
இதனையடுத்து தன்னை முட்டாள் என்று திட்டியதாகக்கூறி தங்கத்தமிழ்ச்செல்வனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பதிலுக்கு தங்கத்தமிழ்ச்செல்வனும் மாவட்ட ஆட்சியர் முன்பே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மேடையில் பரபரப்பு ஏற்பட்டது. இருவரும் சண்டை போட்டு கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. இதை அடுத்து துவக்க விழா நிகழ்ச்சி முழுமையாக நடைபெறாமல் பாதியிலேயே முடிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் புறப்பட்டு சென்றனர்.
இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி.. வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன்.. வாரணாசியில் கர்ஜித்தார் பிரதமர் மோடி..!