சென்னை: திமுக அமைச்சர் கே.என்.நேரு கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த மூன்றாவது மெகா ஊழல் விவகாரத்தில் அமலாக்கத்துறை (ED) தமிழக டிஜிபிக்கு புதிய கடிதம் அனுப்பியுள்ளது.
இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை இது குறித்து வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஏற்கனவே அரசு பணிகளுக்கு ₹888 கோடி லஞ்சம் மற்றும் அரசு ஒப்பந்தங்களுக்கு ₹1,020 கோடி லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் ED தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியிருந்தது. இப்போது மூன்றாவதாக, அதிகாரிகளின் பணியிட மாற்றம் மற்றும் பதவி நியமனங்களுக்கு ₹365.87 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக ED கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு!! உதவி கமிஷனர் மாற்றத்தால் திமுக கவுன்சிலர்கள் திக்! திக்!!
இந்த கடிதத்தில் புகைப்படங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள், டிஜிட்டல் சாதனங்களில் இருந்து கிடைத்த ஆவணங்கள் போன்ற உறுதியான ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

அண்ணாமலை தனது அறிக்கையில், "இந்த பல ஆயிரம் கோடி லஞ்சம் அனைத்தும் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சாதனைகள். மிகப்பெரிய ஊழல் நெட்வொர்க் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அரசு அதிகாரிகள் 7 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், "தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இப்போது இரு விளக்கங்களே உள்ளன. தனது ஆட்சியில் நடைபெறும் ஊழல்களை வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் இருப்பது அல்லது அவரும் இந்த ஊழல்களில் உடந்தையாக இருப்பது.
உறுதியான ஆதாரங்கள் இருந்தும் அமைச்சர் நேரு மீது FIR பதிவு செய்யாமல் இருப்பது திமுக ஆட்சியின் சீரழிவை காட்டுகிறது" என்று அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த விவகாரம் திமுக அரசுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. ED-யின் தொடர் கடிதங்கள் மூலம் ஊழல் குற்றச்சாட்டுகள் வலுப்பெறுகின்றன. அமைச்சர் நேரு இதற்கு என்ன பதிலளிப்பார்? அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்? தேர்தல் நெருங்கும் நிலையில் இது அரசியல் பூகம்பத்தை ஏற்படுத்துமா? விரைவில் தெரியும்.
இதையும் படிங்க: ரூ. 4 லட்சம் கோடியை அமுக்கிய திமுக!! எந்தெந்த துறையில் எவ்வளவு பணம் ஊழல்! எடப்பாடி வெளியிட்ட பட்டியல்!