திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில், வங்காள விரிகுடாவின் கடற்கரையோரம் அமைந்த இந்தக் கோவில், தெய்வீகத்தன்மையும், பழமையான வரலாறும், கட்டிடக்கலை அழகும் நிறைந்த ஒரு புனித தலமாகும்.
இங்கு நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில், ஆவணி திருவிழாவின் ஒரு பகுதியாக சண்முகர் சப்பரம் நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் நடைபெறும் ஆவணி திருவிழா, முருகப்பெருமானின் தெய்வீகத்தைப் போற்றும் ஒரு பிரம்மாண்டமான கொண்டாட்டமாகும். இந்தத் திருவிழா பொதுவாக 10 முதல் 12 நாட்கள் வரை நீடிக்கிறது.

மேலும் இதன் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று சண்முகர் சப்பரம். முருகப்பெருமானின் உற்சவ மூர்த்தியான சண்முகர், பல்வேறு அலங்காரங்களுடன் சப்பரத்தில் எழுந்தருளி, கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இந்த ஆண்டுக்கான சண்முகர் சக்கரம் விழா நடைபெற தயாராக இருந்தபோது அர்ச்சகர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சக்கரம் புறப்படுவதில் இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரே நாளில் 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் டெல்லி போலீஸ் பதற்றம்!! பெற்றோர் பயம்!!
சாமி புறப்பட்டை பார்க்க முடியாமல் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதை எடுத்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சண்முகவிலாச மண்டபத்தில் சண்முகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்க இருந்த நிலையில் இந்த மோதல் நிகழ்ந்துள்ளது. சண்முகருக்கு நகை சாத்துவதில் திரி சுதந்திரர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: துணை ஜனாதிபதி தேர்தல்… NDA கூட்டணி வேட்பாளர் CP ராதா கிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!