தமிழக அரசியலில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாட்டின் 17வது முதலமைச்சருமான ஜோசப் விஜய், பதவியேற்ற உடனேயே எதிர்க்கட்சி மற்றும் கூட்டணி தலைவர்களை நேரில் சந்தித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த சந்திப்புகள் வெறும் மரியாதைக்கானவை மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை விதைக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகின்றன. பதவியேற்பு விழாவுக்குப் சட்டமன்றத்தில் புதிய எம்எல்ஏக்களின் பதவிப்பிரமாணம் முடிந்த உடனேயே முதலமைச்சர் விஜய் தனது முதல் முக்கிய சந்திப்பை முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுடன் நடத்தினார்.

தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்தார். அன்புமணி ராமதாஸ் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரையும் விஜய் சந்தித்துள்ளார். பதவி ஏற்ற உடனே அரசியல் கட்சி தலைவர்களை முதல்வர் விஜய் சந்தித்து வருவதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க: பழனிசாமி பிடிவாதத்தால் மொத்தமும் போச்சு! முதல்வர் கனவு பொய்த்ததால் திருமாவளவன் அதிருப்தி!
முதலமைச்சர் விஜயின் அணுகுமுறை அரசியல் நாகரீகத்தின் முதிர்ச்சிக்கு அடையாளம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து விஜய் வாழ்த்து பெற்றதை குறிப்பிட்டு திருமாவளவன் கூறியுள்ளார். முதல்வருக்கும், அவரை ஆரத் தழுவி வரவேற்ற முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்கும் பாராட்டுக்கள் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: Breaking News! விஜய்க்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திருமாவளவன்!! ஆதவ் கையில் ஆதரவு பத்திரம்?