தலித் மக்கள் மட்டும் விஜய் பின்னால் போவது கிடையாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் பேசுகையில், சினிமாவில் இருந்து நடிகர்கள், இயக்குநர்கள் அரசியலுக்கு வரும் போது தமிழக மக்களிடையே ஒரு வரவேற்பு இருக்கிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் நடிகர்களை மக்கள் தூக்கி கொண்டாடுவதில்லை. பவன் கல்யாணால் கூட இதுவரை ஆட்சியை பிடிப்போம் என்று சொல்லிவிடவில்லை.

ஆனால் தமிழ்நாட்டில் அப்படியல்ல. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவதற்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது. விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது, திருமாவளவனிடம் இருக்கும் தொண்டர்கள் காணாமல் போய்விட்டார்கள் என்றெல்லாம் பேசினார்கள். இப்போது விஜய் வந்தபின், தலித் வாக்கு வங்கி சிதறடிக்க போகிறார் என்கிறார்கள். இது அதீதமான மதிப்பீடு.
இதையும் படிங்க: திமுக கூட்டணியை பிளவுபடுத்த இலக்கு.. விசிக ஒருநாளும் பலிகடாவாகாது.. திருமாவளவன் உறுதி!!

தலித் மக்கள் மட்டும் விஜய் பின்னால் போவது கிடையாது. அனைத்து சாதிகளில் இருந்தும் முதல் தலைமுறை இளைஞர்கள் விஜய் பின்னால் செல்கிறார்கள். அனைத்து சமூகங்களில் இருந்து அரசியல்படுத்தப்படாத சக்திகள், சினிமா மீது ஈடுபாடு கொண்டவர்கள் இருக்கிறார்கள். அதேபோல் விஜய் அம்பேத்கரை கொள்கை தலைவராக ஏற்றது மகிழ்ச்சி தான்.

நேரடி அரசியலில், சமூகத்தில் அம்பேத்கரை பேச வைக்கும் அளவிற்கு நாங்கள் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறோம். விசிக என்ற அமைப்பு இல்லாத காலத்தில் விஜய் கட்சியை தொடங்கி இருந்தால், அவர் அம்பேத்கரை கொள்கை தலைவராக வைத்திருக்க மாட்டார் என்பது என் கணிப்பு. ஏனென்றால் மைய நீரோட்டத்தில் அம்பேத்கரை பேசப்படும் பொருளாக நாங்கள் உருவாக்கி இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக அதிமுகவுக்கு அடுத்து நாங்க தான்... ஒரே போடாக போட்ட திருமாவளவன்!!