2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்து வருகிறார். அதில் தமிழக வெற்றிக்கழகம் முக்கிய இடத்தை பெறுகிறது. அரசியலின் புதிய அலை என விஜய் கூறி வருகின்றனர். ஏற்கனவே அவரை கூட்டணிக்கு அழைத்த நிலையில் அதனை மறுப்பதாக விஜய் பேசி இருந்தார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக விஜயை கூட்டணிக்கு அழைக்கிறதே, அப்படியானால் கொள்கை எதிரி என பாஜகவை விஜய் கூறி வருவதால் எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியை விட்டு வெளியேறுவாரா என்ற கேள்வி எழுந்தது. தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்துடன் அதிமுக கூட்டணி வைக்கும் வகையிலேயே எடப்பாடி பழனிச்சாமி பேசி வந்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கரூர் சம்பவத்திற்கு உடனடியாக தமிழக வெற்றி கழகத்தை குறை சொல்லாமல் முழு பொறுப்பை ஆளும் திமுக அரசின் மீது வைத்தார். தமிழக வெற்றி கழகத்தை எடப்பாடி பழனிச்சாமி கூட்டணிக்கு அழைப்பது அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்களுக்கு உள்ளாகியது. இதனிடையே, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதையும் படிங்க: தயக்கம் காட்டிய ஸ்டாலின்... தட்டித்தூக்க முடிவெடுத்த எடப்பாடி பழனிசாமி... திருமாவால் திமுக கூட்டணிக்குள் கும்மாங்குத்து...!
விஜயுடன் கூட்டணி என்றால் என் டி ஏ கூட்டணியில் இருந்து வெளியேற தயாரா என அதிமுகவுக்கு திருமாவளவன் கேள்வி எழுப்பினார். தவெகவை ஏற்றுக்கொண்டு பாஜகவை கழற்றிவிட தயாராகிவிட்டதா அதிமுக எனவும் கேள்வி எழுப்பினார். அப்படி
பாஜகவை அதிமுக கழற்றிவிடும் என்றால் கூட்டணி வைக்க நம்பகத்தன்மையற்ற கட்சியாக அதிமுக மாறிவிடும் என்றும் கூறினார். தவெகவுடன் கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலை ஏன் வரிந்து கட்டிக்கிட்டு வக்காலத்து வாங்குறீங்க? - வழக்கறிஞர் விவகாரத்தால் டென்ஷன் ஆன திருமா...!