திமுக - விசிக கூட்டணி தமிழ்நாட்டு அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக மிக முக்கியமான ஒரு அங்கமாக இருந்து வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி என்பது தலித் மக்களின் உரிமைகளுக்காகவும், சாதி ஒழிப்பு, சமூக நீதி, தமிழ் தேசிய உணர்வு போன்ற கொள்கைகளை முன்னிறுத்தி செயல்படும் கட்சி. இதன் தலைவரான திருமாவளவன் தமிழக அரசியலில் தனித்துவமான குரலாக விளங்குபவர்.
இரு கட்சிகளும் ஒன்றாக இணைந்து பயணிக்கத் தொடங்கியது 2000களின் பிற்பகுதியில் இருந்தே தொடங்கியது என்றாலும், தொடர்ச்சியான மற்றும் வலுவான கூட்டணியாக மாறியது 2016 மற்றும் அதற்குப் பிறகு தான். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக சில தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் 2021 சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

அப்போது விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் 4 இடங்களில் வெற்றி பெற்றது விசிக. 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், திமுக - விசிக முதல் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திமுகவுடன் பேரம் பேசும் கட்சியாக விடுதலை சிறுத்தைகள் இருக்காது என்று தெரிவித்தார். வலிமைக்கேற்ப இடங்கள் வேண்டும் என்று திமுகவிடம் கேட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “மோடி அரசியல் தமிழ்நாட்டில் போனியாகாது...” - பாஜகவை கிழித்து தெங்கவிட்ட திருமாவளவன்...!
புதுச்சேரியிலும் தங்களுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதி பங்கீடு குறித்தும் கோரிக்கை விடுத்திருப்பதாக கூறினார். தமிழகத்தை பொறுத்தவரை மோடி வித்தை எடுபடாது என்று கூறினார். முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்த பிறகு மீண்டும் அழைப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தொகுதி பங்கேட்டில் தனது நிலைப்பாட்டை தெளிவாக திருமாவளவன் வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: 12 தொகுதி கேட்கும் விசிக! காங்கிரசை தொடந்து போர்க்கொடி!! திமுக கூட்டணியில் தீராத தலைவலி!!