கடந்த 2025 பிப்ரவரி 12 அன்று கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற "மாணவர் பாராளுமன்றம்" நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார், மற்றும் இதில் LGBTQ+ சமூகத்தின் உரிமைகள் குறித்த விவாதமும் இடம்பெற்றது. எல்.ஜி.பி.டி.கியூ சமூகம் குறித்து ஒரு மாணவர் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில், விவாத பொருளாகின.

இந்த நிலையில், எந்த ஒரு உள்நோக்கமும் இல்லாமல் தான் கருத்து தெரிவித்ததாகவும் எல் ஜி பி டி கியூ தோழர்களின் மனம் வருந்தும்படியாக இருந்ததற்கு வருந்துவதாகவும் திருமாவளவன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், எல் ஜி பி டி க்யூ தோழர்களின் மனம் வருந்தும்படியாக இருந்த கருத்துக்கு வருத்தத்தை தெரிவித்துள்ளதாகவும், இந்த உள்நோக்கத்துடனும் தான் பேசவில்லை என்றும் மீண்டும் விளக்கமளித்தார்.
இதையும் படிங்க: அந்த விஷயத்தில் திமுக, அதிமுக ரெண்டுமே வீக் தான்... கூட்டணி ஆட்சி குறித்து திருமா ஓபன் டாக்...!

தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் பணி என்பது எங்கள் களப்பணிகளில் ஒன்று என்றும் அதுவே எங்கள் முதன்மையான பணி அல்ல., தேர்தல் நெருங்கும் சூழலில் அதனை நாங்கள் தீவிர்படுத்துவோம் என கூறினார். தற்போது கட்சியின் மறு சீரமைப்புக்கான பணிகளை கவனம் செலுத்தி வருகிறோம் என தெரிவித்தார். திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கிறது., அதுமட்டுமல்லது திமுக கூட்டணி உறுதியாகவும் கட்டுக்கோப்பாகவும் இருக்கிறது என கூறினார்.

பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அது அனைவருக்கும் தெரிந்த உண்மை என்றும் முக்கியமான சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தவிர்க்க முடியாத, மறுக்க முடியாத ஒன்றுதான் எனக் கூறினார். பழைய ஓய்வூதிய திட்ட கோரிக்கைகளை விடுதலை சிறுத்தைகளும் முதலமைச்சருக்கு அவ்வப்போது சுட்டிக்காட்டி உள்ளதாகவும், தேர்தலுக்கு முன்னதாக அதனை நிறைவேற்றுவார்கள் என எண்ணுவதாக கூறினார். அதேபோல் எந்த கட்சியாக இருந்தாலும் 100க்கு 100% வாக்குகளை நிறைவேற்ற முடியாது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: உண்மையா எந்த உள்நோக்கமும் இல்லங்க.. LGBTQ+ சர்ச்சை.. வருத்தம் தெரிவித்த திருமா..!