சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற தமிழக எம்பிக்கள் கூட்டம் நிறைவடைந்தது. மத்திய அரசு முன்னெடுக்கும் தொகுதி மறுவரையறை தொடர்பான விவகாரத்தை ஆலோசிக்கும் நோக்கில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில், திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் இதில் பங்கேற்காமல் புறக்கணித்தன.
காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் கலந்துகொண்டனர். மத்திய அரசு மேற்கொள்ள உத்தேசித்துள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து விவாதிப்பதற்காக இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் வாயிலாக அழைப்பிதழ்களை அனுப்பியிருந்தார்.

தமிழக எம்பிக்கள் கூட்டம் நிறைவடைந்த நிலையில், முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற தமிழக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார். தொகுதி மறு வரையறை மசோதாவை கைவிட வேண்டும் என முதல்வர் விஜய் தலைமையில் நடந்த எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக கூறினார்.
இதையும் படிங்க: தமிழகம் எதிர்பார்த்த விஷயத்தில் திடீர் ட்விஸ்ட்... திமுக, அதிமுகவிற்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்...!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார். 543 என்ற எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் நாடாளுமன்றம் கேலிக்கூத்தாக்கி விடும் என்றும் கூறியுள்ளார். திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை தவிர்த்து இருக்கலாம் ஆனால் அதே நிலைப்பாட்டை தான் அவர்கள் எடுப்பார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு கூறியுள்ளார். முதலமைச்சர் விஜயின் அழைப்பை ஏற்று தொகுதி மறு வரையறை தொடர்பான எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்றதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இதெல்லாம் சரியில்ல - உதயநிதி கைது குறித்து சி.எம்.விஜய்க்கு திருமா கொடுத்த அட்வைஸ்...!