கடந்த தேர்தல்களில் NDA கூட்டணியில் அங்கம் வகித்த அமமுக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக என்று டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சில நாட்களுக்கு முன்பு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வந்தால் தான் நாட்டிற்கு பாதுகாப்பு என்பதால் நிபந்தனை இன்றி ஆதரவு தெரிவித்ததாகவும் தற்போது தாங்கள் nda கூட்டணியில் உள்ளோமா இல்லையா என்பதை நயினார் நாகேந்திரன் கூறினால் தங்களுக்கும் நன்றாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் டிடிவி தினகரன் கூறிய விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஏற்கனவே மக்களவைத் தேர்தலில் தங்களோடு கூட்டணியில் இருந்து இன்றுவரை தங்கள் கூட்டணியில் தான் இருக்கிறார் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அவர் அங்கம் வகிக்கிறார் எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தங்கள் விளங்குவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளது பாஜக கூட்டணி கட்சிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகுவது தொடர்பாக திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, nda கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரனின் எதிர்காலம் இனி சிறப்பாக இருக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தலையில் இடியை இறக்கிய அமெரிக்கா… கண்டுக் கொள்ளாத பாஜக! போராட்டத்தில் குதித்த திமுக கூட்டணி
அவரது அரசியல் எதிர்காலம் சிறப்பாக இருக்க தன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். பாஜக கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறுவார்கள் என கூறியது நடந்த வருவதாக தெரிவித்தார். டிடிவி தினகரனின் முடிவு அவரது எதிர்காலத்திற்கு நல்லது என கருதுவதாக திருமாவளவன் கூறினார்.
இதையும் படிங்க: திருமாவின் பேச்சு சரியல்ல… சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் எதிர்ப்பு..!