தமிழக அரசியல் பல தசாப்தங்களாக திராவிட இயக்கங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை மாநிலத்தின் முக்கிய அரசியல் சக்திகளாக இருந்து வருகின்றன. இந்த இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியைக் கைப்பற்றி, தமிழக அரசியல் களத்தில் இருமுனை அமைப்பை உருவாக்கியுள்ளன. மூன்றாவது அணி என்ற கருத்து, திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக மக்களுக்கு புதிய தலைமையையும், கொள்கைகளையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
இந்த அணி பொதுவாக புதிய அரசியல் கட்சிகள், கூட்டணிகள், அல்லது சமூக இயக்கங்களால் உருவாக்கப்படுகிறது. கடந்த காலங்களில், பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி (தேமுதிக), மற்றும் புதிய தமிழகம் போன்ற கட்சிகள் மூன்றாவது அணியாக உருவாக முயற்சித்தன, ஆனால் அவை பெரும்பாலும் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைத்து செயல்பட்டன. தற்போது, தவெக உள்ளிட்ட கட்சிகள் உருவாகி உள்ளதால் 3வது அணி ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், மூன்றாவது அணி என்பது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் மூன்றாவது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என திருமாவளவன் கூறி உள்ளார். மத்தியில் மாநிலத்திலும் மூன்றாவது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியது இல்லை என்றும் மூன்றாவது அணி உருவாக்கப்பட்டிருந்தாலும் அது வெற்றி பெறவில்லை என்று கூறினார். வரும் தேர்தலிலும் திமுக கூட்டணியா அதிமுக கூட்டணியா என்பதே மக்களின் மனநிலையாக உள்ளது என கூறிய திருமாவளவன், திமுக, அதிமுகவை தாண்டி ஏற்படும் எந்த கூட்டணியும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: "சீட்டுக்கும் நோட்டுக்கும் செல்லும் விசிக!" - திருமாவை வம்பிழுக்கும் பாஜக...!
தொடர்ந்து பேசிய அவர், நாமக்கல் கிட்னி விற்பனை சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசினார். அப்போது, கிட்னி விற்பனை தொடர்பாக தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றும் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்துகிறேன் என்றும் கூறினார். தீவிரமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: மன்னிப்பு கேட்கலன்னா நடக்குறதே வேற... கே. பி. ராமலிங்கத்துக்கு விசிகவினர் பகிரங்க எச்சரிக்கை!