திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தில் ஜூன் 21, 2026 அன்று ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு பெரும் பரபரப்பையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுவரை பலர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொழிலக பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நிறுவனம் இறால் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தது. இறால் பதப்படுத்தும் தொழிலில் குளிர்சாதன வசதி அவசியம் என்பதால், அங்கு அமோனியா அடிப்படையிலான குளிரூட்டும் அமைப்பு பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 120 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. வாயு வேகமாகப் பரவியதால் தொழிலாளர்கள் மூச்சுத் திணறல், மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளானார்கள். சிலருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: நாளுக்கு நாள் அதிகரிக்கும் தவெகவினரின் அட்ராசிட்டி... நகராட்சி அலுவலகத்திற்குள் கும்பலாக நுழைந்து செய்த காரியம்...!
உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கின. தொழிலாளர்கள் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வட மாநிலங்களைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள். ஓடிஷா, ஜார்கண்ட், அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் இங்கு பணியாற்றி வந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 22 வயதான ஒடிசாவை சேர்ந்த பெண் உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க: அம்மோனியா கசிவில் இறந்ததாய் அறிவிக்கப்பட்ட பெண்! ஆந்திராவில் உயிருடன் இருப்பதால் பகீர்! அம்பலமானது மோசடி!