திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் நிறுவனம் இயங்கி வந்தது. நேற்று அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் அமோனியா வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டனர். இறால் பதப்படுத்தும் தொழில் என்பதால் அங்கு எப்போதும் குளிர்சாதன வசதியுடன் கூடிய சூழல் நிலவுகிறது.
அந்த அமைப்பில் பயன்படுத்தப்பட்ட அமோனியா வாயு கசிந்ததால், அங்கு பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன் காரணமாக பலருக்கு மூச்சுத்திணறல், மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. சிலருக்கு நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டதால் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாயுகசிவு விவகாரத்தில் பாதிக்கப்பட்டு இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இறால் பண்ணையில் அம்மோனியா வாயு கசிந்து ஏழு பேர் உயிரிழந்த விவகாரத்தில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியானது. கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமோனியா கேஸ் செல்லும் பைக் வால்வில் இருந்து கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுத்தடுத்து தலையில் இறங்கும் பேரடி..! வாயுக் கசிவால் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு..!!
பணி முடிந்து ஓய்வில் இருந்தவர்கள் அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆலையிலேயே தங்கி இருந்த 50-க்கும் மேற்பட்ட ஆண் பெண் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அமோனியா வாயுகசிவு தொடர்பாக ஆலையின் உரிமையாளர் மோகன், மேலாளர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கும்மிடிப்பூண்டி கொடூரம்..! பிஞ்சு உயிர் பறிபோன சோகம்... பெற்றோருக்கு ரூ.8 லட்சம் நிவாரணம்..!!