திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் நிறுவனம் இயங்கி வந்தது. நேற்று அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் அமோனியா வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டனர். இறால் பதப்படுத்தும் தொழில் என்பதால் அங்கு எப்போதும் குளிர்சாதன வசதியுடன் கூடிய சூழல் நிலவுகிறது. அந்த அமைப்பில் பயன்படுத்தப்பட்ட அமோனியா வாயு கசிந்ததால், அங்கு பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
இதன் காரணமாக பலருக்கு மூச்சுத்திணறல், மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. சிலருக்கு நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டதால் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே நேற்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலும், சிகிச்சை பலனின்றியும் இரு பெண்கள் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் தேவையான வசதிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 11 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்களில் அனைவருக்கும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததுடன், அவர்களின் உடல்நிலையும் மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: கும்மிடிப்பூண்டி கொடூரம்..! பிஞ்சு உயிர் பறிபோன சோகம்... பெற்றோருக்கு ரூ.8 லட்சம் நிவாரணம்..!!
இந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்படுவது பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படும் நிலையில் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது. இருப்பினும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்ற முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுளளனர்.
இதையும் படிங்க: கும்மிடிப்பூண்டி கொடூரம்: ‘கூட்டு பாலியல் வன்கொடுமையா’..? போலீஸ் புது அப்டேட்..!!