தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற தனது முதல் சுதந்திர தின விழாவில், கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் முதலமைச்சர் விஜய். அணிவகுப்பு ஊர்தியில் கம்பீரமாக வலம் வந்த அவர், கேலரியில் அமர்ந்திருந்த விஐபிகளுக்கு கை உயர்த்தி சல்யூட் அடித்தார். இந்த நிகழ்வின்போது நடந்த ஒரு காட்சி தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கேலரியின் முதல் வரிசையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் அருகருகே அமர்ந்திருந்தனர். விஜய்யைப் பார்த்ததும் பெற்றோர் கைகூப்பி வணக்கம் செலுத்த, திரிஷா மட்டும் எழுந்து நின்று விஜய்யைப் போலவே கம்பீரமாகத் திரும்ப சல்யூட் அடித்தார். ஊர்தியில் இருந்தபடியே புன்னகையுடன் அந்த சல்யூட்டை ஏற்றுக்கொண்ட முதலமைச்சரின் பார்வை, அங்கிருந்த கேமராக்களின் கவனத்தை திரிஷா பக்கம் திருப்பியது.
மஞ்சள் சேலையும் பச்சை ஜாக்கெட்டும் அணிந்து வந்திருந்த திரிஷாவின் முகத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் தெரிந்தது. ஏற்கனவே விஜய் பதவியேற்பு விழாவிலும் முதல் வரிசையில் அமர்ந்து உற்சாகப்படுத்திய திரிஷா, இம்முறையும் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தது கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய்யின் குடும்ப வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், விவாகரத்து செய்திகள் பரவிய நிலையில், திரிஷாவின் தொடர் வருகை சந்தேகங்களை எழுப்பி வருகிறது.
இதையும் படிங்க: விஜய் Vs தனுஷ்: தமிழக அரசியலில் உருவாகும் புதிய போட்டி! ஸ்டாலினுக்கு காத்திருக்கும் சவால்?

விஐபி திருமணத்தில் இருவரும் ஒன்றாகக் கலந்துகொண்டது, தேர்தல் வெற்றிக்குப் பிறகு திருப்பதி சென்றுவிட்டு விஜய்யின் வீட்டிற்குச் சென்று வாழ்த்தியது, அஜித் குமாரின் தாய் மறைவின்போது ஒன்றாக அஞ்சலி செலுத்தியது போன்ற நிகழ்வுகள் இதற்கு முன்னர் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சுதந்திர தின விழாவிலும் திரிஷா முதல் வரிசையில் பெற்றோருக்கு அருகில் அமர்ந்திருந்தது, விஜய்-சங்கீதா மீண்டும் இணைவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
திரிஷா அடித்த சல்யூட்டும் விஜய் அதை ஏற்றுக்கொண்ட தருணமும் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. அதேநேரம் சங்கீதா ஆர்மி ரசிகர்கள் இந்தக் காட்சிகளைக் கண்டு கொந்தளித்து வருகின்றனர். கொடியேற்றத்தை விட, இருவரும் பரிமாறிக்கொண்ட அந்த ஒரு சல்யூட் தற்போது தமிழகத்தின் முதன்மைப் பேசுபொருளாக மாறியுள்ளது. அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் இந்த நிகழ்வு தொடர்பான கருத்துக்கள் தொடர்ந்து வருகின்றன.
இதையும் படிங்க: ஸ்டைலா? சென்டிமென்ட்டா? வெள்ளிக்கிழமை விஜய் அணியும் பட்டு வேட்டி, சட்டையின் பின்னணி!