திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் நான்கு வழித்தடங்களும் முழுமையாக சீரமைக்கப்பட்டு 46 மணி நேரம் பிறகு இயல்பு நிலைக்கு ரயில் சேவை தொடங்கியது,
சென்னை தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி.எல் இருந்து 52 டீசல் டேங்கர்களில் டீசல் நிரப்பி கொண்டு சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூர் யார்டுக்கு நோக்கி சென்ற சரக்கு ரயிலானது
திருவள்ளூர் ஏகாட்டூர் ரயில் நிலையம் இடையே நேற்று முன் தினம் ஞாயிறு காலை 5:10 மணியளவில் ரயில் தடம் புரண்ட விபத்தில் 18 டீசல் டேங்கர்கள் கவிழ்ந்து எரிந்து நாசமானது பற்றிய தீயை 7 மணி நேரம் போராடி 100 மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்
இதையும் படிங்க: அலட்சியத்தால் நடந்த கோர விபத்து.. கேட் கீப்பர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!
இந்த தீ விபத்தில் 12 கோடி மதிப்பிலான 11,70,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள்கள் எரிந்து நாசமானதாக தகவல் தெரிய வந்துள்ளது,
இதனால் அரக்கோணம் சென்னை மார்க்கமாக ரயில் சேவை முற்றிலும் பாதிப்படைந்தது. அதைத் தொடர்ந்து அதிவிரைவு விரைவுகள் சரக்கு ரயில்கள் செல்லக்கூடிய முதல் இரண்டாவது வழித்தடத்தில் பகுதியில் கவிழ்ந்து விழுந்த 18 டேங்கர்களை இரண்டு ராட்சத கிரேன் உதவியுடன் 21 மணி நேரம் போராடி அப்புறப்படுத்தப்பட்டன
மற்றொரு புறத்தில் புறநகர் ரயில்கள் செல்லக்கூடிய மூன்று நான்கு வழிதடத்தில் தாண்டவளம் சீரமைக்கப்பட்டு. அந்த தண்டவாளப் பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வந்தே பாரத், புறநகர் ரயில்கள் 10 கிலோ மீட்டர் வேகத்தில் இரு மார்க்கமாக இயக்கப்பட்டன.
புறநகர் ரயில்கள் செல்லக்கூடிய வழித்தடத்தில் சென்ற எக்ஸ்பிரஸ் வந்தே பாரத் ரயில்கள் ரயில்களானது கடம்பத்தூர் ரயில் நிலைய கிராசிங் மாற்றப்பட்டு வழக்கமாக செல்லக்கூடிய வழித்தடத்திற்கு மாற்றி அனுப்பப்பட்டன.
விபத்து ஏற்பட்ட தண்டவாளம் மற்றொரு வழித்தடம் 300 மீட்டர் அளவில் தண்டவாளம் முழுமையாக சேதமடைந்ததால் அத்தகைய தண்டவளங்கள் அப்புறப்படுத்தப்பட்டு புதிதாக தண்டவாளம் அமைக்கும் பணி மேற்கொண்டு சீரமைக்கப்பட்டு விபத்து ஏற்பட்ட வழித்தடமான இரண்டில் அதிவிரைவு ரயில்கள் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன.
வழித்தடம் ஒன்றில் இன்று அதிகாலை 2:55 மணி அளவில் தண்டவளம் சீரமைப்பு பணி முடிவுற்றதால் 46 மணி நேரம் பிறகு முழுமையாக ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது,
இதையும் படிங்க: #BREAKING கடலூர் ரயில் விபத்து - திடீர் திருப்பமாக வெளியான முக்கிய தகவல்...!