திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் என்பது பழமையான மற்றும் புகழ்பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாகும். இந்தக் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இங்கு திருமால் ராஜகோபாலன் மிக அழகிய வடிவில் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலின் குடமுழுக்கு விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த விழா கோயிலின் புனரமைப்பு மற்றும் புனித நீராட்டு வைபவத்துடன் நிறைவடையும் சிறப்பு நிகழ்வாகும்.தற்போது, இந்த ராஜகோபால சுவாமி கோயிலின் குடமுழுக்கு விழா வரும் ஜனவரி 28ஆம் தேதி புதன்கிழமை மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிகழ்வை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மன்னார்குடி, நீடாமங்கலம் மற்றும் கோட்டூர் ஆகிய மூன்று ஒன்றியங்கள் மற்றும் அவற்றுக்குட்பட்ட பகுதிகளுக்கு ஜனவரி 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தொடர்பான அறிவிப்பில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் மற்றும் நகர பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில் குடமுழுக்கானது 28 அன்று நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: அம்பத்தூரில் திடீர் ராட்சத பள்ளம்..! 20 ஆழத்துக்கு உள்ளே சென்ற சாலை… பொதுமக்கள் அச்சம்..!
எனவே, பொதுமக்கள் கலந்து கொள்வதற்கு ஏதுவாக உள்ளூர் விடுமுறை அளித்திட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு புதன் கிழமை அன்று ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்தும், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு 07.02.2026 சனிக்கிழமை அன்று வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரியணை ஏறுவாரா விஜய்? தவெக முன்னாள் இருக்கும் சவால்கள்?! தவிக்கும் தொண்டர்கள்!